HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events   |    Music Review  |      Photo gallery      |    Videos    |      Audios      |      Top 10 Songs      |    New Releases    |    Tamil Books   
   Fun in Music     |       Lyrics       |   Upcoming Events      |   Specials   |    Partners     |    CT - Food Festival    |     Gallery     |     Contact us
PROFILES     Music      |     Cinema      |     Dance      |     Drama      |     Television      |     Radio      |     Variety      |     Mimicrys      |     Kavidhai        

ராகங்களும் திரைப்படப் பாடல்களும்

11. “ஷண்முகப்ரியா”

இந்த ராகத்திற்கு ‘சாமரம்’என்றும் மற்றொரு பெயர் உண்டு. இது முருகப் பெருமானுக்கு உகந்த ராகமாகக் கருதப்படுகிறது.

இது 56ஆவது ‘மேளகர்த்தா’ ராகமாகும். பெண்பால் ராகமான இதை காலை எட்டுமணியளவில் பாடலாம்.

இந்த ராகத்தின் ஸ்வரங்கள் :

ஷட்ஜமம்,சதுஸ்ருதி ரிஷபம்,சாதாரண காந்தாரம் ப்ரதி மத்யமம், பஞ்சமம், சுத்த தைவதம், கைஷிகி- நிஷாதம்.
 
ஆரோஹணம்     :  ரி க ம ப த நி ஸ்
அவரோஹணம :  ஸ் நி த ப ம க ரி

‘ஷண்முகப்பிரியா’ ராகத்தில் அமைந்த கர்நாடக ராகப் பாடல்கள் :

பாடல்  இயற்றியவர் பாடல் வகை
கேளிகே சின்னய்யா புரந்தரதாசர்  கீர்த்தனை
நீ பராக்ரழு தியாகையர் கீர்த்தனை
சித்தி விநாயகம் முத்துத் சாமி தீட்சிதர் கீர்த்தனை
வள்ளிநாயகநீ ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் கீர்த்தனை
பவசாகரம் கோபாலகிருஷ்ண பாரதி கீர்த்தனை
ஸ்ரீ கணேசா  ஊத்துக்காடு வெங்கடசுப்பையா கீர்த்தனை
பார்வதி நாயகனே பாபநாசம் சிவன் கீர்த்தனை

‘ஷண்முகப்ரியா’ ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள்

1. பாடல் : சரவணபவ எனும் திருமந்திரம் தனை சதா ஜபி என் நாவே...
    படம் : ‘பவளக்கொடி’(1949)
    பாடியவர் : M.S.சரோஜினி
    இசையமைப்பாளர் : C.R.சுப்புராமன்
    இயற்றியவர் : பாபநாசம் சிவன்
 
2. பாடல் : “வேலனே செந்தமிழ் வித்தகா நீ கொண்ட வெற்றி வடிவேலுமெங்கே”
    படம் : “அவ்வையார்”(1953)
    பாடியவர் : K.B.சுந்தராம்பாள்
    இசையமைப்பாளர் : மாயவரம் வேணு
    இயற்றியவர் : கொத்தமங்கலம் சுப்பு
 
3. பாடல் : “நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும் நிலைமை ”
    படம் : “இரும்புத்திரை”(1960)
    பாடியவர் : T.M.சவுந்திர ராஜன்,P.லீலா
    இசையமைப்பாளர் : S.V.வெங்கட்ராமன்
    இயற்றியவர் : கொத்தமங்கலம் சுப்பு
 
4. பாடல் : “பழம்நீயப்பா ஞானப்பழம் நீயப்பா...”
    படம் : திருவிளையாடல்(1965)
    பாடியவர் : K.B.சுந்தராம்பாள்
    இசையமைப்பாளர் : K.V.மகாதேவன்
    இயற்றியவர் : கண்ணதாசன்
 
5. பாடல் : “மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன...”
    படம் : தில்லானா மோகனாம்பாள்(1968)
    பாடியவர் : P.சுசீலா
    இசையமைப்பாளர் : K.V.மகாதேவன்
    இயற்றியவர் : கண்ணதாசன்
 
6. பாடல் : தந்தன தந்தன தாளம் வரும் புது ராகம் வரும்
    படம் : புதிய வார்ப்புகள்(1979)
    பாடியவர் : உமா ரமணன் ஜென்சி
    இசையமைப்பாளர் : இளையராஜா
    இயற்றியவர் : கங்கை அமரன்
<< Previous Index >> Next