HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events   |    Music Review  |      Photo gallery      |    Videos    |      Audios      |      Top 10 Songs      |    New Releases    |    Tamil Books   
   Fun in Music     |       Lyrics       |   Upcoming Events      |   Specials   |    Partners     |    CT - Food Festival    |     Gallery     |     Contact us
PROFILES     Music      |     Cinema      |     Dance      |     Drama      |     Television      |     Radio      |     Variety      |     Mimicrys      |     Kavidhai        

ராகங்களும் திரைப்படப் பாடல்களும்

13. “லதாங்கி”

இது 63ஆவது ‘மேளகர்த்தா ராகமாகும். ஆண்பால் ராகமான இதை உச்சி வேளையில் பாடவேண்டும்.

‘லதாங்கி’என்பது ‘மாசிக்காய்’ என்ற மருந்துப் பொருளாகும். கேட்பவரின் மனப்பிணியைப் போக்கும்.

‘லதாங்கி’ என்பது,மெல்லிய கொடியால் சுற்றப்பட்ட ‘அங்கி’ (ஆடை அல்லது இழை)என்றும் பொருள்படும்.

இந்த ராகத்தின் ஸ்வரங்கள் :

ஷட்ஜமம்,சதுஸ்ருதி ரிஷபம்,அந்தர காந்தாரம்,ப்ரதி மத்யமம், பஞ்சமம், சுத்த தைவதம், காகலி- நிஷாதம்.
 
ஆரோஹணம்    : ஸ ரி க ம ப த நி ஸ்
அவரோஹணம் : ஸ் நி த ப ம க ரி ஸ

‘லதாங்கி’ ராகத்தில் அமைந்த கர்நாடக இசைப் பாடல்கள் :

பாடல் இயற்றியவர் பாடல் வகை
கண்டஜுடுமி தியாகையர் கீர்த்தனை
கற்பகாம்பிகை நின் பாபநாசம் சிவன் கீர்த்தனை

‘லதாங்கி’ ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள் :

1942 ல் வெளியான “நந்தனார்”என்ற படத்தில்,எம்.டி. பார்த்தசாரதி இசையமைக்க பாபநாசம் சிவன் இயற்றிய “..பிறவாவரம் தாரும் பெம்மானே...”என்ற பாடலை M.M.தண்டபாணி தேசிகர் பாடினார்.

1953ல் வெளியான “மதன மோகினி”என்ற படத்தில் M.P.சிவம் என்பவர் எழுதிய...“வாழிய செந்தமிழ் தாயே...” என்ற பாடலை K.V. மகாதேவன் இசையமைத்துப் பாடினார்.

1960ல் வெளியான “மன்னாதி மன்னன்”என்ற படத்தில் மருதகாசி எழுதிய “ஆடாத மனமும் உண்டோ...”என்ற பாடலுக்கு விஸ்வநாதன் -ராமமூர்த்தி இசையமைக்க, T.M.சவுந்தரராஜனும், M.L.வசந்தகுமாரியும் பாடியிருந்தனர்.

முன்னதாக,1939ல் வெளியான “தியாக பூமி” என்ற படத்தில் ‘ஸ்ரீ ஜகதாம்பிகையே...’ என்ற பாடலை,பாபநாசம் சிவன் எழுதி, இசையமைத்துப் பாடினர்.(உடன் இசையமைத்தவர்: மோதிபாபு.)

1977ல் வெளியான “மதுரகீதம்”என்ற படத்தில் சந்திரபோஸ் இசையமைக்க,T.M.சவுந்தரராஜன்,சீர்காழி கோவிந்தராஜன் இணைந்து பாடிய“சுகமான ராகம் சுவையான தமிழ்ப் பாட்டு... என்ற பாடலும்‘லதாங்கி’ ராகத்தில் அமைந்ததே!

 
<< Previous Index >> Next