HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events   |    Music Review  |      Photo gallery      |    Videos    |      Audios      |      Top 10 Songs      |    New Releases    |    Tamil Books   
   Fun in Music     |       Lyrics       |   Upcoming Events      |   Specials   |    Partners     |    CT - Food Festival    |     Gallery     |     Contact us
PROFILES     Music      |     Cinema      |     Dance      |     Drama      |     Television      |     Radio      |     Variety      |     Mimicrys      |     Kavidhai        

ராகங்களும் திரைப்படப் பாடல்களும்

ஜன்ய ராகங்களில்

“பூபாளம்”


எந்தெந்த ராகங்களில் ‘ஆரோஹணம்’ ‘அவரோஹணம்… இரண்டிலும் ஏழு, ஏழு ஸ்வரங்களும் முழுமையாக இருக்கின்றனவோ, அந்த ராகங்கள் தான் ‘சம்பூர்ண ராகங்கள்’, ‘ஜனக ராகங்கள்’
‘கர்த்தாராகங்கள்’ ‘தாய்ராகங்கள்’ அல்லது ‘மேளகர்த்தா ராகங்கள் என்றெல்லாம் குறிப்பிடப்படுகின்றன.

அவ்வராறில்லாமல், ‘ஆரோஹணத்திலும்’‘அவரோஹணத்திலும்’
(அல்லது இரண்டிலும்) இருக்கும் ஸ்வரங்களின் எண்ணக்கை குறைந்தால்,அந்த ராகங்கள்‘ஜன்ய ராகங்கள்’ அல்லது ‘சேய் – ராகங்கள்’என்றழைக்கப்படுகின்றன.

இதிலிருந்து, ‘ஜன்ய ராகங்கள்’ என்பவை ‘தாய் – ராகங்களின் ’ ஸ்வரங்களின் எண்ணிக்கையை மாற்றியமைப்பதன் மூலம் பிறப்பவை என்பது தெளிவாகும்.

உதாரணமாக, ‘நட பைரவி’, என்பது ‘மேளகர்த்தா’ ராகமாகும். அது ‘ஆரோஹணத்திலும்’ ‘அவரோஹணத்திலும்’ ஏழு, ஏழு ஸ்வரங்களை உடையது. ‘பைரவி’ என்பது ‘ஜன்ய ராகமாகும்.
(‘நடபைரவி’யிலிருந்து பிறந்தது.) ‘பைரவி’ ராகத்தின் ‘ஆரோஹணத்தில்’ மூன்று அன்ய ஸ்வரங்களைக் கொண்டதால் இது ‘ஜன்ய ராக’மாகிறது.

‘கரஹரப்ரியா’ ஒரு ‘மேளகர்த்தா ராகம். அதன் ‘ஜன்ய ராகமான’ ‘மத்யமாவதி…யின் ஆரோஹணத்தில் ‘சரிகமபநி’ என்று ஆறு ஸ்வரங்களும், அவரோஹணத்தில் ‘சநிபமரிச’ என்று ஆறு
ஸ்வரங்களுமே உள்ளன.

‘மஹதி’என்ற அபூர்வ ராகத்தின் ஆரோஹணத்திலும், அவரோஹணத்திலும் நான்கு, நான்கு ஸ்வரங்களே உள்ளன.

இப்படியாக, ‘Permutation – Combination’ முறையில் ஆயிரக்கணக்கான ‘ஜன்ய ராகங்கள்’உருவாகின்றன.

ஜன்ய ராகங்களில் தான் ஏராளமான கர்நாடக இசைப் பாடல்களும், அதே போல நூற்றுக்கணக்கான திரையிசைப் பாடல்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

இனி ‘ஜன்ய ராகங்களில்’ இயற்றப்பட்டுள்ளன கீர்த்தனைகளையும், அவற்றிற்கிணையான திரைப்படப் பாடல்களையும் தெரிந்து கொள்ளலாம்.

1. “பூபாளம்”

இது 15ஆவது மேளகர்த்தா ராகமான “மாயா மாளவ கௌள”வின் ஜன்ய ராகமாகும். இதற்கு ‘புள்ளாளம்” “பூபாலம்” என்றும் பெயர்களுண்டு. தமிழிசை மரபில் இந்த ராகம் “புறநீர்மை”
என்ற பண் ஆகும். ஹிந்துஸ்தானி இசை மரபில் இதற்கிணையான ராகம் : பூபாலி என்பதாம்!

ஆண் பால் ராகமான “பூபாளம்”அதிகாலையில் பாட ஏற்றது.

இந்த ராகத்தின் ஸ்வரங்கள் :

ஷட்ஜமம், சுத்த ரிஷபம்,அந்தரகாந்தாரம், பஞ்சமம், சுத்த தைவதம் (‘மத்யமம்’, ‘நிஷாதம்’ ஆகிய ஸ்வரங்கள் இல்லை).
 
ஆரோஹணம்    : ஸ ரி க ப த ஸ்
அவரோஹணம் : ஸ் த ப க ரி ஸ

‘பூபாளம்’ ராகத்தில் அமைந்த கர்நாடக இசைப்பாடல்கள் :

பாடல் இயற்றியவர் பாடல் வகை
க்ரஹபலமேமி தியாகையர் கீர்த்தனை
சதாசலேச்வரம் முத்துசாமி தீட்சிதர் கீர்த்தனை

‘பூபாளம்’ ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள் :

1. பாடல் : நீ பள்ளி எழுந்தால் அல்லாது உயிர்கள் உறக்கம்
    படம் : ராஜ முக்தி(1948)
    பாடியவர் : M.K.தியாகராஜ பாகவதர்
    இசையமைப்பாளர் : C.R. சுப்புராமன்
    இயற்றியவர் : பாபநாசம் சிவன்
 
2. பாடல் : சலங்கையிட்டாள் ஒரு மாது
    படம் : “மைதிலி என்னை காதலி”(1986)
    பாடியவர் : S.P. பாலசுப்ரமணியம்
    இசையமைப்பாளர் : T.ராஜேந்தர்
    இயற்றியவர் :  T.ராஜேந்தர்
       
<< Previous Index >> Next