HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events   |    Music Review  |      Photo gallery      |    Videos    |      Audios      |      Top 10 Songs      |    New Releases    |    Tamil Books   
   Fun in Music     |       Lyrics       |   Upcoming Events      |   Specials   |    Partners     |    CT - Food Festival    |     Gallery     |     Contact us
PROFILES     Music      |     Cinema      |     Dance      |     Drama      |     Television      |     Radio      |     Variety      |     Mimicrys      |     Kavidhai        

ராகங்களும் திரைப்படப் பாடல்களும்

ஜன்ய ராகங்களில்

3. “ஹம்சத்வனி”


 முத்துசாமி தீட்சிதரின் தந்தையான ராமசாமி தீட்சிதரால் உருவாக்கப்பட்டது இந்த ராகம்.

இது 29ஆவது ‘மேளகர்த்தா’வான ‘தீர சங்கராபரண’ ராகத்தின் ஜன்ய ராகமாகும்.
அன்னப்பறவை எழுப்பும் குரல் போல இருப்பதால் ‘ஹம்சத்வனி’ என்று பெயரிடப்பட்ட இது ஓர் உபாங்க ராகமாகும்.

கம்பீரமான இந்த ராகத்துடன் கர்நாடக இசை நிகழ்ச்சியைத் தொடங்கும் போது ‘கச்சேரி’ களை கட்டி விடும்.

ஆண்பால் ராகமான இது மதிய வேளையில் பாட உகந்ததாகும்.

ஹம்சத்வனி’ ராகத்தின் ஸ்வரங்கள் :

ஷட்ஜமம், சதுஸ்ருதி – ரிஷபம், அந்தர காந்தாரம், பஞ்சமம், காகலி நிஷாதம்.
 
ஆரோஹணம்     :  ஸ ரி க ப நி ஸ்
அவரோஹணம் :  ஸ் நி ப க ரி ஸ

இந்த ராகத்தில் அமைந்த கர்நாடக இசைப் பாடல்கள் :

பாடல் இயற்றியவர் பாடல் வகை
அதனபாடுவே  புரந்தரதாசர் கீர்த்தனை
ஜலஜாட்சி ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் வர்ணம்
ரகுநாயக  தியாகையர் கீர்த்தனை
ரகுகுலமந்து தியாகையர் கீர்த்தனை
அபீஷ்டவரத தியாகையர்  கீர்த்தனை
செம்த ஜெர்சு  தியாகையர் கீர்த்தனை
வாதாபி கணபதிம் முத்துச் சாமி தீட்சிதர்  கீர்த்தனை
பார்வதிம்பதிம்  ராமசாமி தீட்சிதர் கீர்த்தனை
சந்தஸெயருண்ட ராமசாமி தீட்சிதர் கீர்த்தனை
ஒரு தரமாகிலும் கோபாலகிருஷ்ண பாரதியார் கீர்த்தனை

‘ஹம்சத்வனி’ராகத்தில் அமைந்ததிரைப்படப் பாடல்கள் :

1. 1960ல் வெளிவந்த ‘அடுத்த வீட்டுப் பெண்’ என்ற படத்தில் தஞ்சை ராமையாதாஸ் எழுதி ஆதிநாராயணராவ் இசையில் P.B. சீனிவாஸ் பாடிய “வனிதா மணியே...” என்ற பாடல்.

2. 1994ல் வெளிவந்த “மகாநதி”என்ற படத்தில் இளையராஜா இசையமைப்பில் சோபனா பாடிய ஸ்ரீ ரங்கரங்க நாதனின் பாதம்.... என்ற பாடல்.

3. 1975ல் வெளிவந்த “மனிதனும் தெய்வமாகலாம்” என்ற படத்தில் கண்ணதாசன் இயற்றி, குன்னக்குடி வைத்யநாதன் இசையில் “பால்பொங்கும் பருவம்’‘என்ற பாடல்.

 
<< Previous Index >> Next