HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events   |    Music Review  |      Photo gallery      |    Videos    |      Audios      |      Top 10 Songs      |    New Releases    |    Tamil Books   
   Fun in Music     |       Lyrics       |   Upcoming Events      |   Specials   |    Partners     |    CT - Food Festival    |     Gallery     |     Contact us
PROFILES     Music      |     Cinema      |     Dance      |     Drama      |     Television      |     Radio      |     Variety      |     Mimicrys      |     Kavidhai        

ராகங்களும் திரைப்படப் பாடல்களும்

ஜன்ய ராகங்களில்

4. “பிலஹரி”


 இந்த ராகம்,29ஆவது ‘மேளகர்த்தா’வான சங்கராபரண ராகத்தின் ஜன்ய ராகமாகும்.

‘பிலம்’என்றால் கழுகு, ‘ஹரி’என்றால் அதன் குரலொலி யாகும்.

இந்த ராகத்தின் சிறப்பம்சம், காகலி நிஷாதமும், கைஷிகி நிஷாதமும் அடுத்தடுத்து வரும்.
‘பாஷாங்க வகையைச் சேர்ந்த இந்த ஆண்பால் ராகத்தைப் பாட காலை வேளை ஏற்றதாகும்.

‘பிலஹரி’ ராகத்தின் ஸ்வரங்கள் :

ஷட்ஜம்ம், சதுஸ்ருதி ரிஷபம், அந்தர காந்தாரம், சுத்த மத்யமம், பஞ்சமம், சதுஸ்ருதிதைவதம், காகலி நிஷாதம், கைஷிகி நிஷாதம்.

ஆரோஹணம்       : ஸ ரி க ப த ஸ்
அவரோஹணம் : ஸ் நி நி த ப ம க ரி ஸ

இந்த ராகத்தில் அமைந்த கர்நாடக இசைப் பாடல்கள் :

பாடல் இயற்றியவர் பாடல் வகை
இது பாக்ய புரந்தரதாசர் கீர்த்தனை
தொரகுணா தியாகையர் கீர்த்தனை
இந்த கன்னா ஆனந்த தியாகையர் கீர்த்தனை
ஏகதந்தம் முத்துச் சாமி தீட்சிதர்  கீர்த்தனை
ஹடகேஸ்வர முத்துச் சாமி தீட்சிதர்  கீர்த்தனை
காமாட்சி  முத்துச் சாமி தீட்சிதர் கீர்த்தனை
இந்த சௌக வீணை குப்பையர் கீர்த்தனை
அப்பா உன்னை பெரியசாமிதூரன் கீர்த்தனை
சந்ததம் அஹம் ஊத்துக்காடு வெங்கடசுப்பையர்  கீர்த்தனை
ஸ்ரீ சாமுண்டேஸ்வரி மைசூர் வாசு தேவாச்சர் கீர்த்தனை

‘பிலஹரி’ ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள் :

1. 1933ல் வெளிவந்த “சீதா கல்யாணம்” என்ற படத்தில் பாபநாசம் சிவன் எழுதி இசையமைக்க S. ராஜம் பாடிய...“கானனம் எது சுவாமி,எதிரில் காணும் கானனம் எது சுவாமி...”என்ற பாடல்.

2. 1962ல் வெளிவந்த “கொஞ்சும் சலங்கை” என்ற படத்தில் வள்ளலாரின் அருட்பாவான...ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்...” என்ற தெய்வமணி மாலை விருத்தத்தை S.M. சுப்பையா நாயுடு இசையமைக்க, ‘பிலஹரி’ ராகத்தில் சூலமங்கலம் ராஜலட்சுமி பாடியிருந்தார்.

3. 1981ல் வெளிவந்த “பாலநாகம்மா”என்ற படத்தில் இளையராஜா இசையமைப்பில் K.J. யேசுதாஸ்,உமாரமணன் பாடிய...“கூந்தலிலே மேகம் வந்து...”என்ற பாடல்.

4. 1972ல் வெளிவந்த “அகத்தியர்” என்ற படத்தில் குன்னக்குடி வைத்யநாதன் இசையமைப்பில் M.R.விஜயா பாடிய “தலைவா தவப்புதல்வா...” என்ற பாடல்.

5. 1974ல் வெளிவந்த “நான் அவனில்லை”என்ற படத்தில் கண்ணதாசன் P. பாஸ்கரன் இயற்றி M.S. விஸ்வநாதன் இசையமைப்பில் ஜெயச்சந்திரன், L.R. ஈஸ்வரி இணைந்து பாடிய… “மந்தார மலரே மந்தார மலரே…” என்ற பாடலும் பிலஹரிதான்.

6. 1966ல் வெளியான ‘சந்திரோதயம்’… என்ற படத்தில் வாலி எழுதிய M.S. விஸ்வநாதன் இசையமைக்க, T.M.சவுந்தரராஜன்,சீர்காழி கோவிந்தராஜன் இணைந்து பாடிய...“காசிக்கு போகும் சன்யாசி”என்ற பாடல்.

 
<< Previous Index >> Next