HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events   |    Music Review  |      Photo gallery      |    Videos    |      Audios      |      Top 10 Songs      |    New Releases    |    Tamil Books   
   Fun in Music     |       Lyrics       |   Upcoming Events      |   Specials   |    Partners     |    CT - Food Festival    |     Gallery     |     Contact us
PROFILES     Music      |     Cinema      |     Dance      |     Drama      |     Television      |     Radio      |     Variety      |     Mimicrys      |     Kavidhai        

ராகங்களும் திரைப்படப் பாடல்களும்

ஜன்ய ராகங்களில்

5. “நாட்டை”/ கம்பீர நாட்டை

அவரோஹணத்தில் மட்டும் சற்று வேறுபாடுடைய ஒரே மாதிரி ராகங்கள் இவை. “நாட்டை” ஒரு ‘ஔடவ/ஷாடவ’ராகம்.கம்பீரநாட்டை ஓர் உபாங்க – வக்ர’ ராகமாகும்.

இவை இரண்டுமே 28ஆவது ‘மேளகர்த்தா’ வான ‘சலநாட்டை’ ராகத்திலிருந்து பிறந்த ‘ஜன்ய’ ராகங்களாகும்.

தமிழிசை மரபில் ‘நட்டபாடை’ என்று குறிப்பிடப் படும் பண்வகையே, திரிந்து ‘நாட்டை’என்றாகிறது.

ஆண்பால் ராகங்களான இவற்றைப் பாட மாலை 6மணி முதல் 9மணி வரை ஏற்ற நேரமாகும்.

இந்த ராகங்களின் ஸ்வரங்களாவன :

ஷட்ஜமம்,ஷட்ஸ்ருதி ரிஷபம்,அந்தர காந்தாரம்,சுத்த மத்யம்ம், பஞ்சம்ம், காகலி நிஷாதம். (தைவதம் இல்லை).

நாட்டை ராகம்
 
ஆரோஹணம்    : ஸ க ம ப நி ஸ்
அவரோஹணம் : ஸ் நி ப ம க ரி ஸ

கம்பீரநாட்டை ராகம் :

ஆரோஹணம்    : ஸ க ம ப நி ஸ்
அவரோஹணம் : ஸ் நி ப ம க ஸ

இந்த ராகங்களில் அமைந்த கர்நாடக இசைப் பாடல்கள் :

பாடல்  இயற்றியவர் பாடல் வகை
ரட்சமாம் புரந்தரதாசர் கீர்த்தனை
ஜய ஜய புரந்தரதாசர் கீர்த்தனை
நின்ன பஜன  தியாகையர் கீர்த்தனை
ஜகதானந்தகாரக தியாகையர் கீர்த்தனை
மஹா கணபதிம் முத்துச் சாமி தீட்சிதர் கீர்த்தனை
பரமேஸ... முத்துச் சாமி தீட்சிதர் கீர்த்தனை
பவனாத்மஜ  முத்துச் சாமி தீட்சிதர்  கீர்த்தனை
ஹரஹரசிவ கோபாலகிருஷ்ண பாரதியார் கீர்த்தனை
ஸ்ரீ விக்னராஜம் ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் கீர்த்தனை

‘நாட்டை/கம்பீர நாட்டை’ ராகங்களில் அமைந்த திரைப்படப் பாடல்கள் :

1. 1994ல் வெளிவந்த “காதலன்”என்ற படத்தில் வைரமுத்து இயற்றி, A.R. ரஹ்மான் இசையில் உன்னிகிருஷ்ணன் பாடிய...“என்னவளே அடி என்னவளே...” என்ற பாடல்

2. 1995ல் வெளிவந்த “பாட்சா”என்ற படத்தில் தேவா இசையமைக்க, S.P.பாலசுப்ரமணியம் பாடிய“அழகு... அழகு.... நீ சிரித்தால்..” என்ற பாடல்

3. 2005ல் வெளிவந்த “அந்நியன்”என்ற படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த...”குமாரி...” என்ற பாடல்.

 
<< Previous Index >> Next