HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events   |    Music Review  |      Photo gallery      |    Videos    |      Audios      |      Top 10 Songs      |    New Releases    |    Tamil Books   
   Fun in Music     |       Lyrics       |   Upcoming Events      |   Specials   |    Partners     |    CT - Food Festival    |     Gallery     |     Contact us
PROFILES     Music      |     Cinema      |     Dance      |     Drama      |     Television      |     Radio      |     Variety      |     Mimicrys      |     Kavidhai        

ராகங்களும் திரைப்படப் பாடல்களும்

ஜன்ய ராகங்களில்

6. “ஆபேரி”

 22ஆவது ‘மேளகர்த்தா’ வான ‘கரஹப்ரியா’வின் ஜன்யராகம் ’ஆபேரி’.

‘பேரியாழ்’என்ற ஆயிரம் தந்திகளை உடைய யாழை இசைக்கும் போது எழுந்த இசையே ‘ஆபேரி’ என்றழைக்கப்படுகிறது.

ஹிந்துஸ்தானி இசையில் இதற்கு இணையான ராகம் ‘பீம்பிளாஸ்’

பெண்பால் ராகமான இதை அந்தி மயக்கும் நேரத்தில் பாடுவது பொருந்தும்.

உபாங்க ராகமான ‘ஆபேரியின்’ ஸ்வரங்கள் :

ஷட்ஜமம், சதுஸ்ருதி ரிஷபம், சாதாரண காந்தாரம்,
சுத்த மத்யமம், பஞ்சம்ம், சதுஸ்ருதி தைவதம், கைஷிகி நிஷாதம்.
 
ஆரோஹணம்    : ஸ க ம ப நி ஸ்
அவரோஹணம் : ஸ் நி த ப ம க ரி ஸ

‘ஆபேரியில் அமைந்த கர்நாடக இசைப் பாடல்கள்:

பாடல்  இயற்றியவர்  பாடல் வகை
எந்து பாரோ  புரந்தரதாசர் கீர்த்தனை
நகுமோமுகலனேனி தியாகையர் கீர்த்தனை
வினபாரி முத்து சாமி தீட்சிதர் கீர்த்தனை
கந்தா வந்தருள் பாபநாசம் சிவன்  கீர்த்தனை

‘ஆபேரி ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள்
 
1. பாடல் : அமைதியில்லாதென் மனமே, என் மனமே
    படம் : பாதாள பைரவி(1951)
    பாடியவர் :  P.லீலா
    இசையமைப்பாளர் :  கண்டசாலா
    இயற்றியவர் :  தஞ்சை ராமையாதாஸ்
 
2. பாடல் : வாராயோ வெண்ணிலாவே,கேளாயோ
    படம் : மிஸ்ஸியம்மா(1955)
    பாடியவர் :  P.லீலா
    இசையமைப்பாளர் : S.ராஜேஸ்வர ராவ்
    இயற்றியவர் : தஞ்சை ராமையாதாஸ்
 
3. பாடல் : சிங்காரவேலனே தேவா
    படம் : கொஞ்சும் சலங்கை(1962)
    பாடியவர் : S.ஜானகி
    இசையமைப்பாளர் :  S.M.சுப்பையா நாயுடு
    இயற்றியவர் :  கு.மா. பாலசுப்ரமணியம்
 
4. பாடல் : வேலோடு விளையாடும் முருகையா
    படம் : சித்ராங்கி(1964)
    பாடியவர் :  P.சுசீலா
    இசையமைப்பாளர் :  வேதா
 
5. பாடல் : பழமுதிர்ச்சோலையிலே பார்த்தவன்
    படம் : குழந்தையும் தெய்வமும் (1965)
    பாடியவர் :  P.சுசீலா
    இசையமைப்பாளர் :  M. S.விஸ்வநாதன்
    இயற்றியவர் :  கண்ணதாசன்
 
6. பாடல் : இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை நீ
    படம் : திருவிளையாடல் (1965)
    பாடியவர் :  T.R.மகாலிங்கம்
    இசையமைப்பாளர் :  K.V. மகாதேவன்
 
7. பாடல் : கோமாதா எங்கள் குலமாதா
    படம் : சரஸ்வதி சபதம்(1966)
    பாடியவர் :  P.சுசீலா
    இசையமைப்பாளர் :  K.V. மகாதேவன்
    இயற்றியவர் :  கண்ணதாசன்
 
8. பாடல் : கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா
    படம் : ஜீன்ஸ்(1998)
    பாடியவர் :  நித்ய ஸ்ரீ மகாதேவன்
    இசையமைப்பாளர் : A.R.ரஹ்மான்
    இயற்றியவர் :  வைரமுத்து

 
<< Previous Index >> Next