HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events   |    Music Review  |      Photo gallery      |    Videos    |      Audios      |      Top 10 Songs      |    New Releases    |    Tamil Books   
   Fun in Music     |       Lyrics       |   Upcoming Events      |   Specials   |    Partners     |    CT - Food Festival    |     Gallery     |     Contact us
PROFILES     Music      |     Cinema      |     Dance      |     Drama      |     Television      |     Radio      |     Variety      |     Mimicrys      |     Kavidhai        

ராகங்களும் திரைப்படப் பாடல்களும்

ஜன்ய ராகங்களில்

7. “ஆபோகி”

 இதுவும் “கரஹரப்ரியா“வின் ஜன்ய ராகம் தான்! இது பக்தி பாவம் நிறைந்த ராகம். ‘ஆ’என்றால் பசு; ‘போகி’ என்றால் இந்திரன். ஆக, இந்திரனின் பசுவாகிய ‘காமதேனு’ தான் ‘ஆபோகி’ :

ஆண்பால் ராகமான இதைப்பாட பொருத்தமான நேரம், காலை 8 மணி முதல் 10 மணி வரை.

‘உபாங்க’வகையைச் சேர்ந்த
‘ஆபோகி’ ராகத்தின் ஸ்வரங்கள் :

ஷட்ஜமம், சதுஸ்ருதி ரிஷபம், சாதாரண காந்தாரம், சுத்த மத்யமம், சதுஸ்ருதி தைவதம் (பஞ்சமம்,நிஷாதம் இல்லை).
 
ஆரோஹணம்     : ஸ ரி க ம த ஸ்
அவரோஹணம் : ஸ் த ம க ரி ஸ

‘ஆபோகி’ ராகத்தில் அமைந்த கர்நாடக இசைப்பாடல்கள் :

பாடல்  இயற்றியவர் பாடல் வகை
மனசு நில்ப தியாகையர்  கீர்த்தனை
ஸ்ரீ லட்சுமி வராஹம் முத்து சாமி தீட்சிதர் கீர்த்தனை
மோசம் வந்ததே கோபாலகிருஷ்ண பாரதியார்  கீர்த்தனை
மோஹசாய ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் கீர்த்தனை
ஜெய நாராயணா ஹரிகேச நல்லூர் முத்தையா பாகவதர் கீர்த்தனை

‘ஆபோகி’ ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள்
 
1. பாடல் : நான் அன்றி யார் வருவார்
    படம் : மாலையிட்ட மங்கை(1958)
    பாடியவர் :  T.R.மகாலிங்கம்,A.P.கோமளா
    இசையமைப்பாளர் :  விஸ்வநாதன் ராமமுர்த்தி
    இயற்றியவர் :  கண்ணதாசன்
 
2. பாடல் : தங்கரதம் வந்தது வீதியிலே
    படம் : கலைக்கோயில்(1964)
    பாடியவர் :  பாலமுரளி கிருஷ்ணா, P.சுசீலா
    இசையமைப்பாளர் :  விஸ்வநாதன் ராமமுர்த்தி
    இயற்றியவர் : கண்ணதாசன்
 
3. பாடல் : இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே
    படம் : வைதேகி காந்திருந்தாள்(1984)
    பாடியவர் :  ஜெயசந்திரன், வாணி ஜெயராம்
    இசையமைப்பாளர் :  இளையராஜா
   
4. பாடல் : கொஞ்ச நேரம் கொஞ்ச வேண்டும்
    படம் : சந்திரமுகி(2005)
    பாடியவர் :  ஆஷா பான்ஸ்லே மதுபாலகிருஷ்ணன்
    இசையமைப்பாளர் :  வித்யாசாகர்

 
<< Previous Index >> Next