HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events   |    Music Review  |      Photo gallery      |    Videos    |      Audios      |      Top 10 Songs      |    New Releases    |    Tamil Books   
   Fun in Music     |       Lyrics       |   Upcoming Events      |   Specials   |    Partners     |    CT - Food Festival    |     Gallery     |     Contact us
PROFILES     Music      |     Cinema      |     Dance      |     Drama      |     Television      |     Radio      |     Variety      |     Mimicrys      |     Kavidhai        

ராகங்களும் திரைப்படப் பாடல்களும்

ஜன்ய ராகங்களில்

8. “மத்யமாவதி”

இந்த ராகம் 22ஆவது ‘மேளகர்த்தா’ வான கரஹரப்ரியாவின் ஜன்ய ராகமாகும்!

ஆண்பால் ராகமான இதை அதிகாலையில் பாடுவது பொருந்தும்.

உபாங்க ராகமான ‘மத்யமாவதி’யைத்தான் வழக்கமாக கர்நாடக இசை நிகழ்ச்சிகளில் நிறைவாகப் பாடுவார்கள்.

இதன் ஸ்வரங்கள் :

ஷட்ஜமம், சதுஸ்ருதி ரிஷபம், சுத்த மத்யமம், பஞ்சமம், கைஷிகி நிஷாதம். (காந்தாரம், தைவதம் இல்லை.)
 
ஆரோஹணம்     : ஸ ரி ம ப நி ஸ்
அவரோஹணம் : ஸ் நி ப ம ரி ஸ

‘மத்யமாவதி’யில் அமைந்த கர்நாடக இசைப்பாடல்கள் :
 
பாடல் இயற்றியவர்  பாடல் வகை
அச்சுதானந்த  புரந்தரதாசர் கீர்த்தனை
நகுமோழு தியாகையர் கீர்த்தனை
நாதுபை தியாகையர் கீர்த்தனை
பன்னகசயன  முத்து சாமி தீட்சிதர் கீர்த்தனை
தர்மசம்வர்த்தனி முத்து சாமி தீட்சிதர் கீர்த்தனை
பார்த்து பிழை கோபாலகிருஷ்ண பாரதியார்  கீர்த்தனை
ஆசையினை  ஊத்துக்காடு வெங்கடசுப்பையர்  கீர்த்தனை
இன்னம் பிறவாமலே  முத்துத்தாண்டவர்  கீர்த்தனை

‘மத்யமாவதி’ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள் :
 
1. பாடல் : அங்கும் இங்கும் எங்கும் இன்பமே
    படம் : ராஜமுக்தி(1948)
    பாடியவர் :  M.K.T.பாகவதர், M.L. வசந்தகுமாரி
    இசையமைப்பாளர் :  C.R.சுப்பராமன்
    இயற்றியவர் :  பாபநாசம் சிவன்
 
2. பாடல் : அற்புத லீலைகளை யார் அறிவார்
    படம் : சிவகாமி(1960)
    பாடியவர் :  M.K.தியாகராஜ பாகவதர்
    இசையமைப்பாளர் : K.V.மகாதேவன்
    இயற்றியவர் : பாபநாசம் சிவன்
 
3. பாடல் : சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
    படம் : பிராப்தம்(1971)
    பாடியவர் : T.M.சவுந்தர்ராஜன், P.சுசீலா
    இசையமைப்பாளர் :  M.S.விஸ்வநாதன்   
    இயற்றியவர் :  கண்ணதாசன்
 
4. பாடல் : வேலாலே விழிகள்
    படம் : என்னைப் போல் ஒருவன்(1978)
    பாடியவர் :  T.M.சவுந்திரராஜன்,P.சுசீலா
    இசையமைப்பாளர் : M.S.விஸ்வநாதன்
    இயற்றியவர் : கண்ணதாசன்
 
5. பாடல் : என் கல்யாண வையோகம் உன்னோடுதான்
    படம் : அழகே உன்னை ஆராதிக்கிறேன்(1979)
    பாடியவர் : வாணிஜெயராம்
    இசையமைப்பாளர் : இளையராஜா
    இயற்றியவர் : வாலி
 
6. பாடல் : விழாமலே இருக்க முடியுமா?
    படம் : ஸ்டூடண்ட் நம்பர்-1 (2003)
    பாடியவர் :  K.S.சித்ரா
    இசையமைப்பாளர் : மரகதமணி
    இயற்றியவர் : நா.முத்துகுமார்

 
<< Previous Index >> Next