HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events   |    Music Review  |      Photo gallery      |    Videos    |      Audios      |      Top 10 Songs      |    New Releases    |    Tamil Books   
   Fun in Music     |       Lyrics       |   Upcoming Events      |   Specials   |    Partners     |    CT - Food Festival    |     Gallery     |     Contact us
PROFILES     Music      |     Cinema      |     Dance      |     Drama      |     Television      |     Radio      |     Variety      |     Mimicrys      |     Kavidhai        

ராகங்களும் திரைப்படப் பாடல்களும்

ஜன்ய ராகங்களில்

9. “புன்னாக வராளி”

இந்த ராகம், எட்டாவது ‘மேளகர்த்தா’ ’ வான ‘ ‘ ஹனுமத் தோடி’ ’ யின் ஜன்ய ராகமாகும்.

இது ‘பாஷாங்க’ ராகமென்றும் ‘நிஷாதாந்திய’ ராகமென்னும் குறிப்பிடப்படும். (அதாவது, ‘நிஷாத்த்’திற்கு மேல் வேறு பிரயோகம் இல்லாத ராகம்).
இளங்காலை நேரத்தில் பாடத் தகுந்த இது ஒரு பெண் பால் ராகமாகும்.

இந்த ராகத்தின் ஸ்வரங்கள் :

ஷட்ஜமம், சுத்த ரிஷபம், சுத்த காந்தாரம், சதுஸ்ருதி ரிஷபம், சாதாரண காந்தாரம், சுத்த மத்யமம், பிரதி மத்யமம்,பஞ்சமம்,சுத்த தைவதம், கைஷிகி நிஷாதம்.
 
ஆரோஹணம்    : ஸ ரி க ம ப த நி
அவரோஹணம் : நி த ப ம க ரி ஸ

‘புன்னாகவராளி’ ராகத்தில் அமைந்த கர்நாடக இசைப் பாடல்கள் :
 
பாடல் இயற்றியவர் பாடல் வகை
நாதர் முடிமேலிருக்கும் பாம்பாட்டிச் சித்தர் பாடல்
ரகி தந்திரிய  புரந்தரதாசர்  கீர்த்தனை
நமோ நமோ  புரந்தரதாசர்  கீர்த்தனை
ஏஹி அன்னபூர்ணே  முத்து சாமி தீட்சிதர்  கீர்த்தனை
தள்ளுவாரோ  கோபாலகிருஷ்ண பாரதி  கீர்த்தனை
நீலவானம் ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் கீர்த்தனை

‘புன்னாகவராளி’ ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள் :
 
1. பாடல் : “ஒரு மடமாதும் ஒருவனுமாகி...”
    படம் : பட்டினத்தார்(1935)
    பாடியவர் :  எம்.எம் தண்டபாணி தேசிகர்
    இசையமைப்பாளர் :  தேசிகர்
    இயற்றியவர் :  பட்டினத்தார் பாடல்
 
2. பாடல் : ஐயே மெத்தக்கடினம்
    படம் : நந்தனார் (1942)
    பாடியவர் :  எம்.எம் தண்டபாணி தேசிகர்
    இசையமைப்பாளர் : M.D.பார்த்தசாரதி
    இயற்றியவர் : கோபாலகிருஷ்ண பாரதி
 
3. பாடல் : ஒரு மடமாது ஒருவனுமாகி...
    படம் : பட்டினத்தார்(1964)
    பாடியவர் :  T.M.சவுந்திரராஜன்
    இசையமைப்பாளர் :  G. ராமநாதன்
    இயற்றியவர் :  பட்டினத்தார் பாடல்   
 
4. பாடல் : கண்ணிலாடும் ஜாலம் யாவும்
    படம் : பூலோக ரம்பை(1958)
    பாடியவர் :  A.M.ராஜா, P.லீலா
    இசையமைப்பாளர் :  C.N.பாண்டுரங்கன்
 
5. பாடல் : மாலை மயங்குகின்ற நேரம்...
    படம் : மரகதம் (1958)
    பாடியவர் :  (ராதா)ஜெயலட்சுமி
    இசையமைப்பாளர் :  S.M.சுப்பையா நாயுடு
    இயற்றியவர் :  சுத்தானந்த பாரதியார்
 
6. பாடல் : நாதர் முடிமேலிருக்கும் நல்ல பாம்பே..
    படம் : திகம்பர சாமியார் (1950)
    பாடியவர் :  P.லீலா
    இசையமைப்பாளர் :  G.ராமநாதன்
    இயற்றியவர் :  பாம்பாட்டிச் சித்தர் பாடல்
 
7. பாடல் : நாதர் முடிமேலிருக்கும் நல்ல பாம்பே...
    படம் : திருவருட் செல்வர் (1967)
    பாடியவர் :  T.M.சவுந்தர ராஜன்
    இசையமைப்பாளர் :  K.V. மகாதேவன்
    இயற்றியவர் :  கண்ணதாசன்
 
8. பாடல் : மோகன மாமதனா...
    படம் : மனோண்மணி(1942)
    பாடியவர் :  P.U.சின்னப்பா, T.R.ராஜகுமாரி
    இசையமைப்பாளர் : T.A. கல்யாணம், K.V. மகாதேவன்
    இயற்றியவர் :  ராஜகோபால ஐயர்

 
<< Previous Index >> Next