HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events   |    Music Review  |      Photo gallery      |    Videos    |      Audios      |      Top 10 Songs      |    New Releases    |    Tamil Books   
   Fun in Music     |       Lyrics       |   Upcoming Events      |   Specials   |    Partners     |    CT - Food Festival    |     Gallery     |     Contact us
PROFILES     Music      |     Cinema      |     Dance      |     Drama      |     Television      |     Radio      |     Variety      |     Mimicrys      |     Kavidhai        

ராகங்களும் திரைப்படப் பாடல்களும்

ஜன்ய ராகங்களில்

10. “பந்து வராளி” / சுப பந்துவராளி

இந்த ராகத்தைக் குறித்து ஒரு சர்ச்சை நிலவுகிறது.
51ஆவது ‘மேளகர்த்தா’வாகிய‘காமவர்த்தனி’என்ற ராகத்தின்
மறுபெயர் தான் ‘பந்து வராளி’ என்று ஒரு சாராரும், 45ஆவது ‘மேளகர்த்தா’ வாகிய ‘சுப்பந்து வராளி’யின் ஜன்ய ராகம் தான் “பந்துவராளி” என்று ஒரு சாராரும் கூறுகின்றனர். ‘காம வர்த்தனி’ பந்துவராளி இரண்டிலுமே ஆரோஹணத்திலும் அவரோஹணத்திலும் ஏழு, ஏழு ஸ்வரங்கள் அமைந்துள்ளன! அவை:

ஷட்ஜமம், சுத்த ரிஷபம், அந்தர காந்தாரம், ப்ரதி மத்யமம், பஞ்சமம்,சுத்த தைவதம், காகலி நிஷாதம்.
ஆனால் ‘சுபபந்து வராளி’யின்

ஸ்வரங்கள் :

ஷட்ஜமம், சுத்த ரிஷபம், சாதாரண காந்தாரம் ப்ரதிமத்யமம் பஞ்சமம், சுத்த தைவதம், காகலி நிஷாதம்.

(காந்தாரத்தில் மட்டுமே வேறுபாடு).

ஆகவே இரண்டு ராகங்களையுமே ‘மேளகர்த்தா’ என்றே சொல்லலாம்.

தமிழிசை மரபில் இந்த ராகம் ‘சாதாரிப் பண்’ என்றழைக்கப்படுகிறது. ஹிந்துஸ்தானி இசை மரபில் ‘பூர்யதனாஸ் ரீ’ என்றழைக்கப்படுகிறது.

பந்துவராளி
ஆரோஹணம்     : ஸ ரி க ம ப த நி ஸ்
அவரோஹணம் : ஸ் நி த ப ம க ரி ஸ
சுப பந்துவராள
ஆரோஹணம்     : ஸ ரி க ம ப த நி ஸ்
அவரோஹணம் : ஸ் நி த ப ம க ரி ஸ

இந்த இரண்டு ராகங்களிலும் ஏராளமான கர்நாடக இசைப்பாடல்களும், திரைப்படப் பாடல்களும் இயற்றப் பட்டுள்ளன.

‘பந்துவராளி’ராகத்தில் அமைந்துள்ள கர்நாடக இசைப் பாடல்கள்:

பாடல் இயற்றியவர் பாடல் வகை
யாகி நின்கிந்து  புரந்தரதாசர் கீர்த்தனை
அப்பராம பக்தி தியாகையர் கீர்த்தனை
ரகுவர நன்னு  தியாகையர் கீர்த்தனை
உச்சிஷ்ட கணபதி  தியாகையர் கீர்த்தனை
தென்புலியூர் கோபாலகிருஷ்ண பாரதியார் lகீர்த்தனை
நிருபம்  ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் கீர்த்தனை

‘பந்துவராளி‘ ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள் :

1. 1936ல் வெளியான “நவீன சாரங்கதரா” என்ற படத்தில் பாபநாசம் சிவன் எழுதி,இசையமைத்து M.K. தியாகராஜ பாகவதர் பாடிய...“மின்னல் எழில் உடையாள் இவள் என்னிரு கண் விருத்தாம்...”என்ற பாடல்.

2. 1941ல் வெளியான “சாவித்திரி”என்ற படத்தில் பாபநாசம் சிவன் எழுதி,துறையூர் ராஜகோபால சர்மா இசையமைக்க, M.S. சுப்புலட்சுமி பாடிய… “தேவி” யைப் பூஜை செய்வாய் குழந்தாய்...”என்ற பாடல்.

3. 1943ல் வெளியான “சிவகவி“என்ற படத்தில் பாபநாசம் சிவன் எழுதி, G.ராமநாதன் இசையமைக்க,M.K.தியாகராஜ பாகவதர் பாடிய “அம்பா மனங்கனிந்துனது கடைக் கண்பார்...”என்ற பாடல்

4. 1975ல் வெளியான “வைர நெஞ்சம்”என்ற படத்தில் M.S.விஸ்வநாதன் இசையில் “நீராட நேரம் நல்ல நேரம்...”என்ற பாடல்.

5. “வாழ்வே மாயம்” (1982) என்ற படத்தில் கங்கை அமரன் இசையமைப்பில் S.P. பாலசுப்ரமணியம் பாடிய… “வந்தனம்...” என்ற பாடல்.

6. “ராஜபார்வை”(1981) என்ற படத்தில் வைரமுத்து இயற்றி, இளையராஜா இசையமைப்பில் S.P. பாலசுப்ரமணியம், S. ஜானகி இணைந்து பாடிய... ‘அந்தி மழை பொழிகிறது”என்ற பாடல்.

7. “அபூர்வ ராகங்கள்”(1975) என்ற படத்தில் கண்ணதாசன் இயற்றி M.S.விஸ்வநாதன் இசையமைக்க, வாணி ஜெயராம் பாடிய... “ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்...” என்ற பாடலின் பல்லவி மட்டும் பந்துவராளி ராகம் தான்!

‘சுபபந்துவராளி’ என்ற ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள்:
 
1. பாடல் : இந்த நாடகம் அந்த மேடையில் எத்தனை
    படம் : பாலும் பழமும்(1961)
    பாடியவர் :  P.சுசீலா
    இசையமைப்பாளர் :  விஸ்வநாதன் ராமமுர்த்தி
    இயற்றியவர் :  கண்ணதாசன்
 
2. பாடல் : கால மகள் கைகொடுப்பாள் சின்னய்யா
    படம் : ஆனந்தி(1965)
    பாடியவர் :  P.சுசீலா
    இசையமைப்பாளர் :  M.S.விஸ்வநாதன்
 
3. பாடல் : ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே
    படம் : அவன்தான் மனிதன்(1975)
    பாடியவர் :  T.M.சவுந்திர ராஜன்
    இசையமைப்பாளர் :  M.S.விஸ்வநாதன்
    இயற்றியவர் :  கண்ணதாசன்
 
4. பாடல் : பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டு
    படம் : சரணம் ஐயப்பா(1980)
    பாடியவர் :  K.J.யேசுதாஸ்
    இசையமைப்பாளர் :  சந்திரபோஸ்
    இயற்றியவர் :  தசரதன்
 
5. பாடல் : அம்மா யாரு அப்பா யாரு ஒண்ணும்
    படம் : புதிய பாதை(1989)
    இசையமைப்பாளர் :  சந்திரபோஸ்
    இயற்றியவர் :  வைரமுத்து

   
<< Previous Index >> Next