HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events   |    Music Review  |      Photo gallery      |    Videos    |      Audios      |      Top 10 Songs      |    New Releases    |    Tamil Books   
   Fun in Music     |       Lyrics       |   Upcoming Events      |   Specials   |    Partners     |    CT - Food Festival    |     Gallery     |     Contact us
PROFILES     Music      |     Cinema      |     Dance      |     Drama      |     Television      |     Radio      |     Variety      |     Mimicrys      |     Kavidhai        

ராகங்களும் திரைப்படப் பாடல்களும்

ஜன்ய ராகங்களில்

11. “பைரவி”

இந்த ராகம் 20ஆவது ‘மேளகர்த்தா’வாகிய ‘நடபைரவி’யின் ஜன்ய ராகமாகும்.

தமிழிசை மரபில் ‘கைசிகப் பண்’ என்றழைக்கப் படுவதே இன்றைய ‘பைரவி’ யாகும். (ஹிந்துஸ்தானி இசையில் ‘பைரவி என்றழைக்கப்படுவது கர்நாடக இசை யின் ‘தோடி’ ராகமாகும்.

மாலை நேரத்தில் பாடத் தகுந்த ராகமாகும். ‘பைரவி’ ஆண்பால் ராகமான இது ஒரு ‘பாஷாங்க’ ராக மென்றழைக்கப்படுகிறது.

இந்த ராகத்தின் ஸ்வரங்கள் :

ஷட்ஜமம் , சதுஸ்ருதி ரிஷபம், சாதாரண காந்தாரம், சுத்த மத்யமம், பஞ்சமம், சுத்த தைவதம், சதுஸ்ருதி தைவதம், கைஷிகி நிஷாதம்.


ஆரோஹணம்                :   ஸ க ரி க ம ப த நி ஸ்
அவரோஹணம்            :   ஸ் நி த ப ம க ரி ஸ

‘பைரவி’ ராகத்தில் அமைந்த கர்நாடக இசைப் பாடல்கள் :

பாடல்  இயற்றியவர்  பாடல் வகை
 
ஓடி பாரய்யா  புரந்தரதாசர் கீர்த்தனை
நம்மினவாரினி தியாகையர் கீர்த்தனை
பாலகோபால முத்து சாமி  தீட்சிதர் கீர்த்தனை
ஆருக்கு கோபாலகிருஷ்ண
பொன்னம்பலம் பாரதியார்  கீர்த்தனை
முந்திவரும் இசை  ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் கீர்த்தனை

பைரவி’ ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள் :

1.  பாடல் மானை அடைந்த்து என் அதிர்ஷ்டமே
  படம் நவயுவன் அல்லது கீதாசாரம்(1937)
  பாடியவர்  V.V. சடகோபன்
  இசையமைப்பாளர்  பாபநாசம் சிவன்
  இயற்றியவர்  பாபநாசம் சிவன்
   
2.  பாடல் உனைக்கண்டு மயங்காத பேர்களுண்டோ...
  படம் அசோக்குமார் (1941)
  பாடியவர்  M.K.தியாகராஜ பாகவதர்
  இசையமைப்பாளர் ஆலந்தூர் சிவசுப்ரமணியம்
  இயற்றியவர் பாபநாசம் சிவன்
   
3. பாடல் வேலவரே உன்னைத் தேடி ஒரு மடந்தை
  படம் ஜகதலப்ரதாபன்(1944)
  பாடியவர்  T.A. ஜயலட்சுமி,S. வரலட்சுமி
  இசையமைப்பாளர்  G. ராமநாதன்
  இயற்றியவர்  பாபநாசம் சிவன்
   
4. பாடல் உன்றனுக்கோர் இணையாவார்
  படம் மனோன்மணி(1942)
  பாடியவர்  P.U. சின்னப்பா, T.R.ராஜகுமாரி
  இசையமைப்பாளர்  T.A.கல்யாணம்
  இயற்றியவர்  வேல்சாமிகவி
   
5. பாடல் கல்லானே ஆனாலும்
  படம் ஔவையார்(1953)
  பாடியவர்  K.B. சுந்தராம்பாள்
  இசையமைப்பாளர்  மாயவரம் வேணு
  இயற்றியவர்  ஔவையார்
   
6. பாடல் கண்ணா கரிய முகில் வண்ணா
  படம் பவளக்கொடி (1934)
  பாடியவர்  M.K.தியாகராஜ பாகவதர்
  இசையமைப்பாளர்  பாபநாசம் சிவன்
  இயற்றியவர் பாபநாசம் சிவன்
   
7. பாடல் தேவி நீயே துணை தென் மதுரை வாழ்
  படம் மகேஸ்வரி (1955)
  பாடியவர்  T.A.ரத்னம்
  இசையமைப்பாளர்  G. ராமநாதன்
  இயற்றியவர்  ஆத்மநாதன்
   
8. பாடல் திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே
  படம் ஸ்வாமி ஐயப்பன்(1975)
  பாடியவர்  K.J.யேசுதாஸ்
  இசையமைப்பாளர் த.தேவராஜன்
  இயற்றியவர்  கண்ணதாசன்
   
<< Previous Index >> Next