HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events   |    Music Review  |      Photo gallery      |    Videos    |      Audios      |      Top 10 Songs      |    New Releases    |    Tamil Books   
   Fun in Music     |       Lyrics       |   Upcoming Events      |   Specials   |    Partners     |    CT - Food Festival    |     Gallery     |     Contact us
PROFILES     Music      |     Cinema      |     Dance      |     Drama      |     Television      |     Radio      |     Variety      |     Mimicrys      |     Kavidhai        

ராகங்களும் திரைப்படப் பாடல்களும்

ஜன்ய ராகங்களில்

14.  “நீலாம்பரி”

ஆழ்ந்த உறக்கத்தைத் தரவல்ல இந்த ராகம், 29ஆவது ‘மேளகர்த்தா’வான ‘தீர சங்கராபரணம்’என்ற ராகத்தின் சேய் (ஜன்ய) ராகமாகும்.

பாஷாங்க ராகமான ‘நீலாம்பரி’இரவு நேரத்தில் பாட உகந்தது.

பெண்பால் ராகமான ‘நீலாம்பரி’யின் ஸ்வரங்கள் :

ஷட்ஜமம்,சதுஸ்ருதி ரிஷபம்,அந்தர காந்தாரம், சுத்த மத்யமம், பஞ்சமம்,சதுஸ்ருதி தைவதம்,காகலி நிஷாதம்.

ஆரோஹணம்            :     ஸ ரி க ம ப த நி ஸ்
அவரோஹணம்        :     ஸ் நி ப ம க ரி க ஸ
(அவரோஹணத்தில் தைவதம் இல்லை).

‘நீலாம்பரி’ ராகத்தில் அமைந்த கர்நாடக இசைப் பாடல்கள்:

பாடல் இயற்றியவர் பாடல் வகை
என்னசுடே  ஹாயிசுவதுபுரந்தரதாசர் கீர்த்தனை
உய்யால லூகவய்ய தியாகையர்  கீர்த்தனை
ஸித்தீஸ்வராய முத்து சாமி  தீட்சிதர் கீர்த்தனை
நீலாங்கம் முத்து சாமி தீட்சிதர் கீர்த்தனை
எப்படித்தான் ஊத்துக்காடு  வெங்கடசுப்பையர் கீர்த்தனை
பஞ்சஸாயக ஜனகன் ஸ்வாதித் திருநாள்  கீர்த்தனை

‘நீலாம்பரி’ ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள்:

1. 1948ல் வெளிவந்த ‘இது நிஜமா’ என்ற படத்தில் M.S.சுப்ரமணியம் என்பவர் இயற்றிய...“நீலமயில் வாகனனே நீ தூங்க மாட்டாயா...” என்ற பாடலை இசையமைத்துப் பாடியிருந்தார் S.பாலச்சந்தர்.

2. “சக்தி லீலை”(1972) என்ற படத்தில் T.K. ராமமூர்த்தி அசையமைப்பில் P.சுசீலா பாடிய “பிள்ளை குறைதீர” என்ற பாடல் நீலாம்பரி ராகம்.

   
<< Previous Index >> Next