HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events   |    Music Review  |      Photo gallery      |    Videos    |      Audios      |      Top 10 Songs      |    New Releases    |    Tamil Books   
   Fun in Music     |       Lyrics       |   Upcoming Events      |   Specials   |    Partners     |    CT - Food Festival    |     Gallery     |     Contact us
PROFILES     Music      |     Cinema      |     Dance      |     Drama      |     Television      |     Radio      |     Variety      |     Mimicrys      |     Kavidhai        

ராகங்களும் திரைப்படப் பாடல்களும்

ஜன்ய ராகங்களில்

16. “சாமா”

இந்த ராகத்தை ‘ஸ்யாமா’என்றும் கூறுவர். இது 28ஆவது ‘மேளகர்த்தா’வான ‘ஹரிகாம்போதி’யின் ஜன்ய ராகம்.

உபாங்க ராகமான இதைப் பாடத் தகுந்த நேரம் அந்தி வேளையாகும்.

ஆண்பால் ராகமான ‘சாமா’வின் ஸ்வரங்கள்:

ஷட்ஜமம்,சதுஸ்ருதி ரிஷபம்,அந்தர காந்தாரம், சுத்த மத்யமம், பஞ்சமம்,சதுஸ்ருதி தைவதம்,( நிஷாதம் இல்லை).

ஆரோஹணம்         :    ஸ ரி ம ப த ஸ்
அவரோஹணம்     :    ஸ் த ப ம கா ரி ஸ

‘சாமா’ ராகத்தில் அமைந்த கர்நாடக இசை பாடல்கள் :

பாடல்  இயற்றியவர் பாடல் வகை
பூல சென்டாடிதனே புரந்தரதாசர் கீர்த்தனை
சாந்தமுலேக சவுக்கிய முலேது...  தியாகையர் கீர்த்தனை
திரிபுரசுந்தரி  முத்துச் சாமி தீட்சிதர் கீர்த்தனை
குருகுஹாய முத்துச் சாமி தீட்சிதர் கீர்த்தனை
அன்னபூர்ணே முத்துச் சாமி தீட்சிதர் கீர்த்தனை
மானஸ சஞ்சரரே  சதாசிவ ப்ரம்மேந்திரர்  கீர்த்தனை
தில்லை தலைமென்று  கோபால கிருஷ்ண பாரதியார்  கீர்த்தனை

‘சாமா’ ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள்:

1. பாடல் “சொல்லு குழந்தாய் நிஜமே சொல்லு ”
  படம் சாவித்திரி(1941)
  பாடியவர்  M.S.சுப்புலட்சுமி
  இசையமைப்பாளர்  துறையூர் ராஜ கோபாலசர்மா
  இயற்றியவர்  பாபநாசம் சிவன்
 
2. பாடல் காபி கசக்குதடி மிளகாய் காரம் இனிக்குதடி
  படம் கல்யாணம் பண்ணியும் பிரம்மசாரி(1954)
  பாடியவர்  V.N.சுந்தரம்
  இசையமைப்பாளர்  T.G.லிங்கப்பா
  இயற்றியவர்  K.D.சந்தானம்
 
3.  பாடல் மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே
  படம் நூல்வேலி (1979)
  பாடியவர் பாலமுரளி கிருஷ்ணா
  இசையமைப்பாளர் M.S. விஸ்வநாதன்
  இயற்றியவர்  கண்ணதாசன்
 
4. பாடல் நான் பாடிக்கொண்டே இருப்பேன் உன்
  படம் “சிறை”(1984)
  பாடியவர் வாணி ஜெயராம்
  இசையமைப்பாளர்  M.S. விஸ்வநாதன்
 
5.  பாடல் மானமெல்லாம் போன பின்னே...
  படம் கண்ணகி(1942)
  பாடியவர்  P.U.சின்னப்பா
  இசையமைப்பாளர் S.V.வெங்கட்ராமன்
  இயற்றியவர்  உடுமலை நாராயணகவி
   
<< Previous Index >> Next