HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events   |    Music Review  |      Photo gallery      |    Videos    |      Audios      |      Top 10 Songs      |    New Releases    |    Tamil Books   
   Fun in Music     |       Lyrics       |   Upcoming Events      |   Specials   |    Partners     |    CT - Food Festival    |     Gallery     |     Contact us
PROFILES     Music      |     Cinema      |     Dance      |     Drama      |     Television      |     Radio      |     Variety      |     Mimicrys      |     Kavidhai        

ராகங்களும் திரைப்படப் பாடல்களும்

ஜன்ய ராகங்களில்

17. “அமிர்தவள்ளி”

இது 65ஆவது ‘மேளகர்த்தா ’ வாகிய ‘மேசகல்யாணி’யின் ஜன்யமா அல்லது 72ஆவது ‘மேளகர்த்தா’வாகிய ‘ரசிக ப்ரியா’வின் ஜன்யமா என்ற குழப்பமிருக்கிறது.

அதே போல தமிழிசை மரபில் “மேகராகக் குறிஞ்சி” என்றழைக்கப்பட்ட கண்’அமிர்தவர்ஷணி’யா அல்லது ‘நீலாம்பரி’யா என்ற சர்ச்சையும் தொடருகிறது.
இந்த ராகத்தைப் பாடுவதால் மேகங்கள் திரண்டு மழை பொழியும் என்று நம்பப்படுகிறது.

பெண்பால் ராகமான ‘அமிர்த வர்ஷணி’நள்ளிரவில் பாட ஏற்றது.

இதன் ஸ்வரங்கள் :

ஷட்ஜமம், அந்தர காந்தாரம், ப்ரதி மத்யமம், பஞ்சமம்,காகலி நிஷாதம்.
 
ஆரோஹணம்     : ஸ க ம ப நி ஸ்
அவரோஹணம் : ஸ் நி ப ம க ஸ

(ரிஷபம்,தைவதம் இல்லை).

‘அமிர்தவர்ஷணி’ ராகத்தில் அமைந்த கர்நாடக இசைப் பாடல்கள் :

பாடல் இயற்றியவர் பாடல் வகை
ஸரிஸிருஹ  நயனே  தியாகையர்  கீர்த்தனை
ஆனந்தாம்ருத கர்ஷணி அமிர்தவர்ஷணி முத்துசாமி தீட்சிதர்    கீர்த்தனை

‘அமிர்தவர்ஷணி’யில் திரைப்படப் பாடல்கள்:

1. 1988ல் வெளியான “அக்னி நட்சத்திரம்”என்ற படத்தில் இளையராஜாவின் இசையமைப்பில் ஏசுதாஸ் ஜானகி பாடிய “தூங்காத விழிகள் ரெண்டு ”என்ற பாடல்.

2. 1973ல் வெளிவந்த “கங்கா கவுரி” என்ற படத்தில் M.S. விஸ்வநாதன் இசையமைப்பில் S.ஜானகி பாடிய... “அழகிய மேகங்கள் ” என்ற பாடல்.

   
<< Previous Index >> Next