HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events   |    Music Review  |      Photo gallery      |    Videos    |      Audios      |      Top 10 Songs      |    New Releases    |    Tamil Books   
   Fun in Music     |       Lyrics       |   Upcoming Events      |   Specials   |    Partners     |    CT - Food Festival    |     Gallery     |     Contact us
PROFILES     Music      |     Cinema      |     Dance      |     Drama      |     Television      |     Radio      |     Variety      |     Mimicrys      |     Kavidhai        

ராகங்களும் திரைப்படப் பாடல்களும்

ஜன்ய ராகங்களில்

19. “பிருந்தாவன சாரங்கா”

இது 28ஆவது ‘மேளகர்த்தா’வான ‘ஹரிகாம்போதி’யின் ஜன்ய ராகமாகும். இது ‘தீர சங்கராபரணத்தின்’ ஜன்ய ராகமென்றும் சிலர் கருதுகின்றனர்.

பாஷாங்க ராகமான இது மாலை நேரத்தில் பாடத் தகுந்த தாகும்.

ஆண்பால் ராகமான இதன் ஸ்வரங்கள் :

ஷட்ஜமம்,சதுஸ்ருதி ரிஷபம்,சுத்த மத்யமம்,பஞ்சமம்,கைஷிகி நிஷாதம்,(காந்தாரம்,தைவதம் இல்லை).

ஆரோஹணம் :  ஸ ரி ம ப நி ஸ்
அவரோஹணம் :  ஸ் நி ப ம ரி ஸ

‘பிருந்தாவன சாரங்கா’ ராகத்தில் அமைந்த கர்நாடக இசைப் பாடல்கள்:

பாடல்  இயற்றியவர் பாடல் வகை
ரங்கபுர விஹாரா  முத்துசாமி தீட்சிதர்   கீர்த்தனை
கலியே குஞ்சன் ஸ்வாதித் திருநாள்   கீர்த்தனை

‘பிருந்தாவன சாரங்கா’ ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள்:

1. பாடல் பெண்ணொன்று கண்டேன், பெண் அங்கு
  படம் படித்தால் மட்டும் போதுமா(1962)
  பாடியவர்  T.M.சவுந்தர ராஜன்,P.B.ஸ்ரீனிவாஸ்
  இசையமைப்பாளர்  விஸ்வநாதன் ராம மூர்த்தி
  இயற்றியவர்  கண்ணதாசன்
2.  பாடல் முத்துநகையே உன்னை நானறிவேன்
  படம் என் தம்பி(1968)
  பாடியவர்  T.M.சவுந்தர ராஜன்
  இசையமைப்பாளர்  M.S. விஸ்வநாதன்
  இயற்றியவர்  கண்ணதாசன்
3.  பாடல் இது குழந்தை பாடும் தாலாட்டு
  படம் ஒரு தலை ராகம் (1980)
  பாடியவர் S.P.பாலசுப்ரமணியம்
  இசையமைப்பாளர் A.A.ராஜ்
  இயற்றியவர் T. ராஜேந்தர்
   
<< Previous Index >> Next