HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events   |    Music Review  |      Photo gallery      |    Videos    |      Audios      |      Top 10 Songs      |    New Releases    |    Tamil Books   
   Fun in Music     |       Lyrics       |   Upcoming Events      |   Specials   |    Partners     |    CT - Food Festival    |     Gallery     |     Contact us
PROFILES     Music      |     Cinema      |     Dance      |     Drama      |     Television      |     Radio      |     Variety      |     Mimicrys      |     Kavidhai        

ராகங்களும் திரைப்படப் பாடல்களும்

ஜன்ய ராகங்களில்

21. “காபி”

இந்த ராகம் 22ஆவது ‘மேளகர்த்தா’வான ‘கரஹரப்ரியா’வின் ஜன்ய ராகமாகும். (இந்துஸ்தானி மரபில் ‘காபி’ என்றால் அது கரஹரப்ரியாவுக்கு இணையான ராகமாகும்.)

‘ஸ்ருங்கார ரசத்துக்குப் பொருத்தமான இந்த ராகம், அன்னிய ஸ்வரங்கள் அதிகம் வரும் பாஷாங்க ராகமாகும்.

ஆண்பால் ராகமான ‘காபி’ ரம்யமான மாலை வேளைக்கு ஏற்ற ராகம்.

இந்த ராகத்தின் ஸ்வரங்கள்:

ஷட்ஜமம், சதுஸ்ருதி ரிஷபம், சாதாரண காந்தாரம், அந்தர காந்தாரம்,சுத்த மத்யமம்(ஹிந்துஸ்தானி மரபில் ‘ப்ரதி மத்யமம்’வரும்) பஞ்சமம், சுத்த தைவதம்,சதுஸ்ருதி தைவதம், கைஷிகி நிஷாதம் மற்றும் காகலி நிஷாதம்.
 
ஆரோஹணம் : ஸ ரி ம ப நி ஸ்
அவரோஹணம் : ஸ் நி த நி ப ம க ரி ஸ

‘காபி’ ராகத்தில் அமைந்த கர்நாடக இசைப் பாடல்கள் :

பாடல்  இயற்றியவர்  பாடல் வகை
ஜோ ஜோ ஜோ  புரந்தரதாசர் கீர்த்தனை
இந்த சௌக்யமனி தியாகையர் கீர்த்தனை
வீர ஹனுமதே முத்துசாமி தீட்சிதர் கீர்த்தனை

‘காபி’ ராகத்தில் அமைந்த திரையிசைப் பாடல்கள் :

1.  பாடல் தியானமே எனது...
  படம் அசோக்குமார்(1941)
  பாடியவர்  M.K.தியாகராஜ பாகவதர்
  இசையமைப்பாளர்  ஆலத்தூர் சிவ சுப்ரமணியம்
  இயற்றியவர்  பாபநாசம் சிவன்
 
2. பாடல் எல்லோர்க்கும் எளிது
  படம் ருக்மாங்கதன்(1947)
  பாடியவர்  P.A.பெரிய நாயகி
  இசையமைப்பாளர்  G.ராமநாதன்
  இயற்றியவர் பாபநாசம் சிவன்
 
3.  பாடல் ராஜ ராஜ கோபால…
  படம் கிருஷ்ண விஜயம்(1950)
  பாடியவர்  T.M.சவுந்தர ராஜன்
  இசையமைப்பாளர்  C.S ஜெயராமன்
  இயற்றியவர்  பாபநாசம் சிவன்
 
4. பாடல் நல்லார் ஒருவருக்கு... (தொகையறா)
  படம் ஔவையார்(1953)
  பாடியவர்  K.B.சுந்தராம்பாள்
  இசையமைப்பாளர்  மாயவரம் வேணு
  இயற்றியவர்  ஔவையார்
 
5.  பாடல் அழகே பெண் வடிவான பிம்பமே
  படம் கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி(1954)
  பாடியவர்  V.N.சுந்தரம்
  இசையமைப்பாளர்  T.G.லிங்கப்பா
  இயற்றியவர்  K.D.சந்தானம்
 
6.  பாடல் ஹே… பாடல் ஒன்று
  படம் ப்ரியா (1978)
  பாடியவர்  S.ஜானகி, K.J.யேசுதாஸ்
  இசையமைப்பாளர்  இளையராஜா
 
7.  பாடல் என்மேல் விழுந்த மழைத் துளியே
  படம் மே மாதம் (1994)
  பாடியவர்  ஜெயச்சந்திரன்
  இசையமைப்பாளர்  A.R.ரஹ்மான்
 
8.  பாடல் குச்சி குச்சி ராக்கம்மா
  படம் பம்பாய்(1995)
  பாடியவர்  ஹரிஹரன் குழுவினர்
  இசையமைப்பாளர்  A.R.ரஹ்மான்
 
9. பாடல் கண்ணே கலைமானே
  படம் மூன்றாம் பிறை(1982)
  பாடியவர்  K.J.யேசுதாஸ்
  இசையமைப்பாளர் இளையராஜா
  இயற்றியவர் கண்ணதாசன்

   
<< Previous Index >> Next