HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events   |    Music Review  |      Photo gallery      |    Videos    |      Audios      |      Top 10 Songs      |    New Releases    |    Tamil Books   
   Fun in Music     |       Lyrics       |   Upcoming Events      |   Specials   |    Partners     |    CT - Food Festival    |     Gallery     |     Contact us
PROFILES     Music      |     Cinema      |     Dance      |     Drama      |     Television      |     Radio      |     Variety      |     Mimicrys      |     Kavidhai        

ராகங்களும் திரைப்படப் பாடல்களும்

ஜன்ய ராகங்களில்

22. “முகாரி”

இந்த ராகம் 20ஆவது ‘மேளகர்த்தா’வாகிய‘நடபைரவி’ ராகத்தின் ஜன்ய ராகம். (‘கரஹரப்ரியா’வின் ஜன்யம் என்றும் கருதப்படுகிறது.)

சோகம்,கருணை ஆகிய உணர்வுகளை வெளிப்படுத்த ஏற்ற ராகமாகும்.

பெண்பால் ராகமான ‘முகாரி’யின் ஸ்வரங்கள் :

ஷட்ஜமம், சதுஸ்ருதி ரிஷபம், சாதாரண காந்தாரம், சுத்த மத்யமம்,பஞ்சமம், சுத்த தைவதம்,சதுஸ்ருதி தைவதம், கைஷிகி நிஷாதம்

ஆரோஹணம்    

:

ஸ ரி ம ப த நி த ஸ்

அவரோஹணம்

:

ஸ் நி த ப ம க ரி ஸ

முகாரி’ ராகத்தில் அமைந்த கர்நாடக இசைப் பாடல்கள் :

பாடல்  இயற்றியவர் பாடல் வகை
எந்த நின்னே தியாகையர் கீர்த்தனை
கோவிந்தராஜம்  முத்துசாமி தீட்சிதர்  கீர்த்தனை
சிதம்பர தரிசனமே  கோபாலகிருஷ்ண பாரதி  கீர்த்தனை
இன்னமுது  ஊத்துக்காடு வெங்கட சுப்பையர்  கீர்த்தனை

‘முகாரி’ ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள்:

1. 1957ல் வெளியான ‘அம்பிகாபதி’ என்ற படத்தில் G.ராமநாதன் இசையில் P. பானுமதி, T.M. சவுந்தர ராஜன் பாடிய…“வாடா மலரே தமிழ்த்தேனே…” என்ற பாடல்

2. 1959ல் வெளியான “சிவகங்கைச் சீமை” என்ற படத்தில் கண்ணதாசன் இயற்றி விஸ்வநாதன்- ராமமூர்த்தி இசையமைப்பில் “கனவு கண்டேன் நான் கனவு கண்டேன்” என்ற பாடல்.

   
<< Previous Index >> Next