HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events   |    Music Review  |      Photo gallery      |    Videos    |      Audios      |      Top 10 Songs      |    New Releases    |    Tamil Books   
   Fun in Music     |       Lyrics       |   Upcoming Events      |   Specials   |    Partners     |    CT - Food Festival    |     Gallery     |     Contact us
PROFILES     Music      |     Cinema      |     Dance      |     Drama      |     Television      |     Radio      |     Variety      |     Mimicrys      |     Kavidhai        

ராகங்களும் திரைப்படப் பாடல்களும்

ஜன்ய ராகங்களில்

23. “ஹிந்தோளம்”

 ‘மோகன’ ராகத்தைப் போலவே இதுவும் உலகின் பல நாடுகளின் இசை மரபிலும் இடம் பெற்றுள்ள சர்வதேச ராகமாகும்.

இது 8ஆவது ‘மேளகர்த்தா’வாகிய ‘அனுமத் தோடி’ யின் ஜன்ய ராகமாகும், (20ஆவது ‘மேளகர்த்தா’வாகிய ‘நட பைரவி’யின் ஜன்ய மென்றும் கருதப்படுகிறது) தமிழிசை மரபில்‘இந்தளப்பண்’.

பிற்பகல் மூன்று மணியிலிருந்து மாலை ஆறு மணிக்குள் பாட பொருத்தமான ராகமிது.(ஹிந்துஸ்தானியில் ‘மால்கவுன்ஸ்)

பெண்பால் ராகமான இதன் ஸ்வரங்கள் :

ஷட்ஜமம், சாதாரண காந்தாரம், சுத்த மத்யமம், சுத்த தைவதம், கைஷிகி நிஷாதம் (ரிஷபமும்,பஞ்சமும் இல்லை)
 
ஆரோஹணம்     :  ஸ க ம த நி ஸ்
அவரோஹணம் :  ஸ் நி த ம க ஸ

ஹிந்தோள’ ராகத்தில் அமைந்த கர்நாடக இசைப் பாடல்கள் :

பாடல்  இயற்றியவர் பாடல் வகை
யாரே ரங்கன்  புரந்தரதாசர் கீர்த்தனை
ஸாமஜ வரகமன தியாகையர் கீர்த்தனை
மனசுலோனி  தியாகையர்  கீர்த்தனை
நீரஜாட்சி முத்துசாமி தீட்சிதர்  கீர்த்தனை
ஸரஸ்வதி முத்துசாமி தீட்சிதர்  கீர்த்தனை

‘ஹிந்தோள’ ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள்:

1.  பாடல் மா ரமணன் உமா ரமணன்
  படம் நவீன சதாரம்(1935)
  பாடியவர்  S.S.மணிபாகவதர், S.D.சுப்புலட்சுமி
  இசையமைப்பாளர்  பாபநாசம் சிவன்
  இயற்றியவர்  பாபநாசம் சிவன்
 
2. பாடல் மா ரமணன் உமா ரமணன்
  படம் சேவாசதனம்(1938)
  பாடியவர்  M.S.சுப்புலட்சுமி
  இசையமைப்பாளர்  பாபநாசம் சிவன்
  இயற்றியவர் பாபநாசம் சிவன்
 
3. பாடல் கண்களும் கவி பாடுதே
  படம் அடுத்த வீட்டுப்பெண்(1960)
  பாடியவர் திருச்சி லோகநாதன், சீர்காழி கோவிந்தராஜன்
  இசையமைப்பாளர்  ஆதி நாராயண ராவ்
  இயற்றியவர்  தஞ்சை ராமையாதாஸ்
 
4. பாடல் ராஜசேகரா, என் மேல் மோடிசெய்யல் ஆகுமா
  படம் அனார்கலி (மொழி மாற்றம்) (1955)
  பாடியவர்  ஜிக்கி, கண்டசாலா
  இசையமைப்பாளர்  ஆதிநாராயண ராவ்
  இயற்றியவர்  தஞ்சை ராமையாதாஸ்
 
5.  பாடல் அழைக்காதே...அழைக்காதே...
  படம் மணாளனே மங்கையின் பாக்கியம்(1957)
  பாடியவர்  P.சுசீலா
  இசையமைப்பாளர்  ஆதிநாராயணராவ்
  இயற்றியவர்  தஞ்சை ராமையாதாஸ்
 
6. பாடல் மனமே முருகனின் மயில் வாகனம்
  படம் மோட்டார் சுந்தரம் பிள்ளை(1966)
  பாடியவர்  (ராதா) ஜெயலட்சுமி
  இசையமைப்பாளர்  M.S. விஸ்வநாதன்
  இயற்றியவர்  கொத்தமங்கலம் சுப்பு
 
7. பாடல் ஸ்ரீதேவி என் வாழ்வில்
  படம் இளமைக் காலம் (1980)
  பாடியவர்  யேசுதாஸ்
  இசையமைப்பாளர்  இளையராஜா
 
8.  பாடல் நான் வணங்குகிறேன் சபையிலே
  படம் “குரு”(1980)
  பாடியவர்  S.ஜானகி
  இசையமைப்பாளர்  இளையராஜா
   
<< Previous Index >> Next