HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events   |    Music Review  |      Photo gallery      |    Videos    |      Audios      |      Top 10 Songs      |    New Releases    |    Tamil Books   
   Fun in Music     |       Lyrics       |   Upcoming Events      |   Specials   |    Partners     |    CT - Food Festival    |     Gallery     |     Contact us
PROFILES     Music      |     Cinema      |     Dance      |     Drama      |     Television      |     Radio      |     Variety      |     Mimicrys      |     Kavidhai        

ராகங்களும் திரைப்படப் பாடல்களும்

ஜன்ய ராகங்களில்

24. “ரீதிகௌள”

இது 22ஆவது ‘மேளகர்த்தா’வான ‘கரஹரப்ரியா’வின் ஜன்ய ராகமாகும். (தீட்சிதர் மரபில் ‘நாரீ ரீதிகௌள’என்று பெயர்.)
உபாங்க – வக்ர ராகமான ‘ரீதி கௌள’ அதிகாலையில் பாடப் பொருத்தமானது.

பெண்பால் ராகமான இதன் ஸ்வரங்களாவன :

ஷட்ஜமம், சதுஸ்ருதி ரிஷபம், சாதாரண காந்தாரம், சுத்த மத்யமம்,பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் மற்றும் கைஷிகி நிஷாதம்

ஆரோஹணம்             :   ஸ க ரி க ம நி த நி ஸ்
அவரோஹணம்         :   ஸ் நிதம கமபம கரிகஸ

(ஆரோஹணத்தில் பஞ்சமம் இல்லை)

‘ரீதிகௌள’ ராகத்தில் அமைந்த கர்நாடக இசைப் பாடல்கள் :

பாடல் இயற்றியவர்  பாடல் வகை
ஜனனீ நின்னு வினா சியாமா சாஸ்திரி கீர்த்தனை
பாலே பாலேந்து பூஷணி தியாகையர் கீர்த்தனை
நீலோத்பல  முத்துசாமி தீட்சிதர் கீர்த்தனை
தாண்டவதரிசனம் கோபாலகிருஷ்ண பாரதி  கீர்த்தனை
மஞ்ஜனம் ஊத்துக்காடு வெங்கட சுப்பையர்  கீர்த்தனை

‘ரீதி கௌள’ ராகத்தில் திரைப்படப் பாடல்கள் :

1. 1977ல் வெளிவந்த “கவிக்குயில்” என்ற படத்தில் பஞ்சு அருணாசலம் இயற்றி, இளையராஜா இசையமைக்க, பாலமுரளிகிருஷ்ணா பாடிய.. “சின்னக்கண்ணன் அழைக்கிறான்...” என்ற பாடல்.

2. 1983ல் வெளிவந்த “ஒரு ஓடை நதியாகிறது”என்ற படத்தில் வைரமுத்து இயற்றி இளையராஜா இசையமைத்து, S.P.பாலசுப்ரமணியம்,S. ராஜேஸ்வரி இணைந்து பாடிய... “தலையைக் குனியும் தாமரையே...” என்ற பாடல்.

   
<< Previous Index >> Next