HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events   |    Music Review  |      Photo gallery      |    Videos    |      Audios      |      Top 10 Songs      |    New Releases    |    Tamil Books   
   Fun in Music     |       Lyrics       |   Upcoming Events      |   Specials   |    Partners     |    CT - Food Festival    |     Gallery     |     Contact us
PROFILES     Music      |     Cinema      |     Dance      |     Drama      |     Television      |     Radio      |     Variety      |     Mimicrys      |     Kavidhai        

ராகங்களும் திரைப்படப் பாடல்களும்

ஜன்ய ராகங்களில்

26. “அடானா”

‘அதானா’ என்றால் ‘பூமராங்’ போன்ற ஓர் விளையாட்டு அல்லது கருவி என்று பொருள். அதிலிருந்து ‘அடானா’ என்ற பெயர் வந்திருக்கலாம் என்று தெரிகிறது.

29ஆவது ‘மேளகர்த்தா’வாகிய ‘தீர சங்கராபரண’த்தின் ஜன்ய ராகமான ‘அடானா’ ஒரு வக்ர பாஷாங்க ராகமாகும். தமிழிசை மரபில் இது ‘யாழ்முறிப்பண்’ என்றழைக்கப்பட்டது.

வீரச்சுவையுடன் கூடிய ஆண்பால் ராகமாகிய இந்த ராகத்தை இசைக்க முன்னிரவுவேளை தகுந்த நேரமாகும்.

‘அடானா’வின் ஸ்வரங்களாவன :
ஷட்ஜமம், சதுஸ்ருதி ரிஷபம், அந்தர காந்தாரம்,சுத்த மத்யமம், பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம், கைஷிகி நிஷாதம் மற்றும் காகலி நிஷாதம்.
 
ஆரோஹணம் :   ஸ ரி ம ப நி ஸ்
அவரோஹணம் :  ஸ் நி தா ப ம க ரி ஸ

(ஆரோஹணத்தில் காந்தாரம்,தைவதம் இல்லை)

‘அடானா’வில் அமைந்த கர்நாடக இசைப் பாடல்கள் :

பாடல் இயற்றியவர்  பாடல் வகை
ஸஹல க்ரிஹபால புரந்தரதாசர் கீர்த்தனை
ஏல நீ தயராது தியாகையர் கீர்த்தனை
அம்ம தர்ம தியாகையர் கீர்த்தனை
குஹன்பதே முத்துசாமி தீட்சிதர்  கீர்த்தனை
கனகசபாபதிக்கு கோபாலகிருஷ்ண பாரதியார் கீர்த்தனை

‘அடாணா’ ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள் :

1. பாடல் என்ன புண்ணியம் செய்தேனோ, யார் எனக்கு
  படம் சீதா கல்யாணம் (1934)
  பாடியவர்  S.ஜெயலட்சுமி
  இசையமைப்பாளர்  A.N. கல்யாண சுந்தரம்
  இயற்றியவர்  பாபநாசம் சிவன்
 
2. பாடல் மனக்கோயில் உனக்காகவே
  படம் கல்யாணம் பண்ணிப்பார்(1952)
  பாடியவர்  P.லீலா
  இசையமைப்பாளர்  கண்டசாலா
  இயற்றியவர் தஞ்சை ராமையாதாஸ்
 
3. பாடல் யார் தருவார் இந்த அரியாசனம்
  படம் மகாகவி காளிதாஸ்(1966)
  பாடியவர்  T.M.சவுந்தர ராஜன்
  இசையமைப்பாளர்  K.V.மகா தேவன்
  இயற்றியவர்  கண்ணதாசன்
 
4. பாடல் கதவைச் சாத்தடி கையில் காசில்லாதவன்
  படம் ரத்தக்கண்ணீர்(1954)
  பாடியவர்  M.L.வசந்த குமாரி
  இசையமைப்பாளர்  சிதம்பரம் ஜெயராமன்
 
5.  பாடல் வருகிறாள் உன்னைத் தேடி
  படம் தங்கப்பதுமை(1959)
  பாடியவர்  M.L.வசந்த குமாரி, சூலமங்கலம் ராஜலட்சுமி
  இசையமைப்பாளர்  விஸ்வநாதன் ராம மூர்த்தி
  இயற்றியவர்  பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
   
<< Previous Index >> Next