HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events   |    Music Review  |      Photo gallery      |    Videos    |      Audios      |      Top 10 Songs      |    New Releases    |    Tamil Books   
   Fun in Music     |       Lyrics       |   Upcoming Events      |   Specials   |    Partners     |    CT - Food Festival    |     Gallery     |     Contact us
PROFILES     Music      |     Cinema      |     Dance      |     Drama      |     Television      |     Radio      |     Variety      |     Mimicrys      |     Kavidhai        

ராகங்களும் திரைப்படப் பாடல்களும்

ஜன்ய ராகங்களில்

27. “ஆரபி”

 ‘ஆரபி’ என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு பயிரிடுதல் என்று பொருள். மங்களகரமான இந்த ராகத்தை இசைக்கும் போது நல்லெண்ணங்கள் விதைக்கப்படுகின்றன.

29ஆவது ‘மேளகர்த்தா’வாகிய ‘தீர சங்கராபரணத்’தின் மற்றொரு ஜன்ய ராகமான ‘ஆரபி’ சற்று தடம் புரண்டாலும் ‘சுத்த சாவேரி’ ராகம் போல தொனிக்கும்.

ஆண்பால் ராகமான ‘ஆரபி' யின் ஸ்வரங்கள்:

ஷட்ஜமம், சதுஸ்ருதி ரிஷபம், அந்தர காந்தாரம்,சுத்த மத்யமம், பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் மற்றும் காகலி நிஷாதம்.

ஆரோஹணம் : ஸ ரி ம ப த ஸ்
அவரோஹணம் : ஸ் நி த பமா கரிஸ

(ஆரோஹணத்தில் காந்தாரம், நிஷாதம் இல்லை)

‘ஆரபி’ ராகத்தில் அமைந்த கர்நாடக இசைப் பாடல்கள் :

பாடல்  இயற்றியவர்  பாடல் வகை
அடுகு வரமுல  தியாகையர  கீர்த்தனை
ஆதிபுரீஸ்வரம் முத்துசாமி தீட்சிதர் கீர்த்தனை
சுந்தர குஞ்சித முத்துத்தாண்டவர் கீர்த்தனை

‘ஆரபி’ ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள் :

1. பாடல் பிருந்தாவனமும் நந்தக்குமாரனும் யாவருக்கும்
  படம் மிஸ்ஸியம்மா(1955)
  பாடியவர்  A.M.ராஜா, P.சுசீலா
  இசையமைப்பாளர்  S. ராஜேஸ்வரராவ்
  இயற்றியவர்  தஞ்சை ராமையாதாஸ்
 
2.  பாடல் ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்
  படம் முதலாளி(1957)
  பாடியவர்  T.M.சவுந்தர ராஜன்
  இசையமைப்பாளர்  K.V.மகா தேவன்
  இயற்றியவர்  கா.மு.ஷெரீப்
 
3.  பாடல்  தென்றலில் ஆடும் கூந்தலைக் கண்டேன்
  படம்  மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்(1978)
  பாடியவர்  K.J.யேசுதாஸ், வாணி ஜெயராம்
  இசையமைப்பாளர்  M.S. விஸ்வநாதன்
 
4.  பாடல் ஆடியிலே பெருக்கெடுத்து ஓடி வரும் காவேரி
  படம் “ராதா” (1973)
  பாடியவர் P.சுசீலா குழுவினர்
  இசையமைப்பாளர்  சங்கர்கணேஷ்

   
<< Previous Index >> Next