HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events   |    Music Review  |      Photo gallery      |    Videos    |      Audios      |      Top 10 Songs      |    New Releases    |    Tamil Books   
   Fun in Music     |       Lyrics       |   Upcoming Events      |   Specials   |    Partners     |    CT - Food Festival    |     Gallery     |     Contact us
PROFILES     Music      |     Cinema      |     Dance      |     Drama      |     Television      |     Radio      |     Variety      |     Mimicrys      |     Kavidhai        

ராகங்களும் திரைப்படப் பாடல்களும்

ஜன்ய ராகங்களில்

28. “தர்பார்”

 தர்பார் என்றால் பொதுவாக ‘அரசவை’ என்று பொருளாகும்.

இந்த ராகத்துக்கும் அந்த அரசவைக் கம்பீரம் உண்டு.அதே நேரத்தில் ஆனந்தமும், இன்பமும் கலந்த பாடல்களையும் இந்த ராகத்தில் பாட முடியும்.
இதுவும் 22ஆவது ‘மேளகர்த்தா’ வாகிய ‘கரஹரப்ரியா’ வின் ஜன்ய ராகமே! இந்த ராகத்தை எந்த வேளையிலும் பாடலாம்.

ஆண்பால் ராகமான ‘தர்பாரின்’ ஸ்வரங்களாவன:

ஷட்ஜமம், சதுஸ்ருதி ரிஷபம், சாதாரண காந்தாரம், சுத்த மத்யமம், பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம், மற்றும் கைஷிகி நிஷாதம்.

ஆரோஹணம்    : ஸ ரி ம ப நித நி ஸ்
அவரோஹணம் : ஸ் நித ப ம ரி கா ரி ஸ

(ஆரோஹணத்தில் காந்தாரம் இல்லை).

‘தர்பார்’ ராகத்தில் அமைந்த கர்நாடக இசைப் பாடல்கள் :

பாடல்  இயற்றியவர் பாடல் வகை
அபராதமுல தியாகையர் கீர்த்தனை
தாரி தெலியக  தியாகையர்  கீர்த்தனை
நாரதகுருஸ்வாமி தியாகையர்  கீர்த்தனை
தியாகராஜ தனயம் முத்துசாமி தீட்சிதர் கீர்த்தனை
தில்லை வெளியிலே  கோபால கிருஷ்ண பாரதியார் கீர்த்தனை

‘தர்பார்’ ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள் :

1.  பாடல் மறைவாய் புதைத்த ஓடு மறைந்த மாயம்
  படம் திருநீலகண்டர்(1939)
  பாடியவர்  M.K.தியாகராஜ பாகவதர்
  இசையமைப்பாளர்  பாபநாசம் சிவன்
  இயற்றியவர்  பாபநாசம் சிவன்
   
<< Previous Index >> Next