HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events   |    Music Review  |      Photo gallery      |    Videos    |      Audios      |      Top 10 Songs      |    New Releases    |    Tamil Books   
   Fun in Music     |       Lyrics       |   Upcoming Events      |   Specials   |    Partners     |    CT - Food Festival    |     Gallery     |     Contact us
PROFILES     Music      |     Cinema      |     Dance      |     Drama      |     Television      |     Radio      |     Variety      |     Mimicrys      |     Kavidhai        

ராகங்களும் திரைப்படப் பாடல்களும்

ஜன்ய ராகங்களில்

31. “ஸாரமதி”

இதற்கு ‘ஸாரமிதி’ என்றும் பெயருண்டு. ‘ஸாரம் – இதி’ என்றால் ‘வேதத்தின் சாரம் இதுதான்’ என்று பொருள். ‘ஸாரமதி’ என்றால் நிலவின் ஒளி வெள்ளம் என்றும் கருதப் படுகிறது.(ஸாருமதி என்பது தவறு).

‘ஸாரமதி’க்கும் ‘மார்க்க ஹிந்தோளம்’ என்ற ராகத்திற்கும் பெரும் ஒற்றுமை உண்டு.

இது இருபதாவது ‘மேளகர்த்தா’வான ‘நடபைரவி’யின் ஜன்ய ராகமாகும்.

உபாங்க வகையைச் சேர்ந்த ‘ஸாரமதி’ இரவு வேளை யில் பாட ஏற்ற ராகம்.
பெண்பால் ராகமான ‘ஸாரமதி’யின் ஸ்வரங்களாவன :
ஷட்ஜமம், சதுஸ்ருதி ரிஷபம், சாதாரண காந்தாரம், சுத்த மத்யமம், பஞ்சமம்,சதுஸ்ருதி தைவதம் மற்றும் கைஷிகி நிஷாதம்.

ஆரோஹணம்          :   ஸ ரி க ம ப த நி ஸ்
அவரோஹணம்      :   ஸ் நி த ப ம க ஸ

(அவரோஹணத்தில் ரிஷபம் இல்லை)

கர்நாடக இசை மரபில் தியாகையர் இந்த ராகத்தில் இயற்றிய...“மோட்சமுகலதா...’ என்ற கீர்த்தனை மிகவும் பிரபலமானது.

1. 1948ல் வெளிவந்த “ராஜமுக்தி” என்ற படத்தில் பாபநாசம் சிவன் எழுதி, C.R.சுப்பராமன் இசையமைப்பில் M.K.தியாகராஜ பாகவதர் பாடிய... “உனையல்லால் ஒரு துரும்பு அசையுமோ...” என்ற பாடல் “சாரமதி” ராகம்.

2. 1985ல் வெளிவந்த “சிந்துபைரவி” என்ற படத்தில் வைரமுத்து இயற்றி, இளையராஜா இசையமைக்க, சித்ரா பாடிய ‘பாடறியேன் படிப்பறியேன் பள்ளிகூடம் தானறியேன்’ என்ற பாடலும் ‘ஸாரமதி’ ராகமே!

   
<< Previous Index >> Next