HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events   |    Music Review  |      Photo gallery      |    Videos    |      Audios      |      Top 10 Songs      |    New Releases    |    Tamil Books   
   Fun in Music     |       Lyrics       |   Upcoming Events      |   Specials   |    Partners     |    CT - Food Festival    |     Gallery     |     Contact us
PROFILES     Music      |     Cinema      |     Dance      |     Drama      |     Television      |     Radio      |     Variety      |     Mimicrys      |     Kavidhai        

ராகங்களும் திரைப்படப் பாடல்களும்

ஜன்ய ராகங்களில்

34.“மோகன கல்யாணி”

இதை ‘சுத்த கல்யாணி’ என்றும் சிலர் அழைப்பர். இந்த ராகத்தின் ஆரோஹணம் ‘மோகன’ ராகமாகவும், அவரோஹணம் ‘கல்யாணி’ ராகம் போன்றும் இருப்பதால் இது ‘மோகன கல்யாணி’ என்றழைக்கப்படுகிறது.
ஹிந்துஸ்தானி இசை மரபில் ‘சுத்த கல்யாண்”

உண்மையில் இது 65ஆவது ‘மேளகர்த்தா’ வான ‘மேசகல்யாணி’யின் ஜன்ய ராகமாகும்.

உபாங்க வகையைச் சேர்ந்த இந்த ராகம் அந்தி மாலையில் பாட உகந்த்து.

பெண்பால் ராகமான ‘மோகன கல்யாணி’யின் ஸ்வரங்களாவன :

ஷட்ஜமம்,சதுஸ்ருதி ரிஷபம், அந்தர காந்தாரம்,ப்ரதி மத்யமம், பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம், காகலி நிஷாதம்.

ஆரோஹணம்             :  ஸ ரி க ப த ஸ்
அவரோஹணம்         :  ஸ் நி த ப ம கரி ஸ

(ஆரோஹணத்தில் மத்யமம், நிஷாதம் இல்லை)

‘மோகன கல்யாணி’யில் அமைந்த கர்நாடக இசைப் பாடல்கள் :

பாடல்  இயற்றியவர்  பாடல் வகை
சிக்கவனே இவனு  புரந்தரதாசர் கீர்த்தனை
சிவே ஸ்ரீ காந்தம்  ஸ்வாதித் திருநாள் கீர்த்தனை

‘மோகன கல்யாணி’ ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள் : 

1. பாடல் ஆராரோ நீ ஆராரோ
  படம் ராஜமுக்தி(1948)
  பாடியவர்  M.L.வசந்த குமாரி
  இசையமைப்பாளர்  C.R.சுப்பராமன்
  இயற்றியவர்  பாபநாசம் சிவன்
 
2.  பாடல் அமுதும் தேனும் எதற்கு நீ அருகினில்
  படம் தை பிறந்தால் வழி பிறக்கும்(1958)
  பாடியவர்  சீர்காழி கோவிந்தராஜன்
  இசையமைப்பாளர்  K.V.மகா தேவன்
  இயற்றியவர் சுரதா
 
3.  பாடல் சிரித்தாள் தங்கப் பதுமை அடடா அடடா....
  படம் கண்ணன் என் காதலன் (1968)
  பாடியவர்  T.M.சவுந்தர ராஜன், P.சுசீலா
  இசையமைப்பாளர்  M.S. விஸ்வநாதன்
 
4. பாடல் நான் உன்னைச் சேர்ந்த செல்வம்
  படம் கலைக்கோயில்(1964)
  பாடியவர்  P.B.ஸ்ரீனிவாஸ் ,P.சுசீலா
  இசையமைப்பாளர்  விஸ்வநாதன் ராமமூர்த்தி
  இயற்றியவர்  கண்ணதாசன்
 
5.  பாடல் புன்னகையில் ஒரு பொருள் வந்தது
  படம் பவானி (1967)
  பாடியவர்  T.M.சவுந்தர ராஜன்
  இசையமைப்பாளர்  M.S. விஸ்வநாதன்
  இயற்றியவர்  கண்ணதாசன்
   
<< Previous Index >> Next