HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events   |    Music Review  |      Photo gallery      |    Videos    |      Audios      |      Top 10 Songs      |    New Releases    |    Tamil Books   
   Fun in Music     |       Lyrics       |   Upcoming Events      |   Specials   |    Partners     |    CT - Food Festival    |     Gallery     |     Contact us
PROFILES     Music      |     Cinema      |     Dance      |     Drama      |     Television      |     Radio      |     Variety      |     Mimicrys      |     Kavidhai        

ராகங்களும் திரைப்படப் பாடல்களும்

ஜன்ய ராகங்களில்

36. “மலைய மாருதம்”

 “மலையிலிருந்து வீசும் தென்றல்” என்ற பொருள் தரும் இந்த ராகம் 16ஆவது ‘மேளகர்த்தா’வாகிய ‘சக்கரவாக’ ராகத்தின் ஜன்ய ராகமாகும் .

உபாங்க ராகமான இது காலை வேளையில் பாடத் தகுந்த்தாகும்.

பெண்பால் ராகமான ‘மலைய மாருத’த்தின் ஸ்வரங்கள்:

ஷட்ஜமம்,சுத்த ரிஷபம், அந்தர காந்தாரம், பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம், கைஷிகி நிஷாதம்.

ஆரோஹணம் :   ஸ ரி க ப த நி ஸ்
அவரோஹணம் :   ஸ் நி த ப க ரி ஸ

(மத்யமம் இல்லை)

‘மலையமாருதம்’ ராகத்தில் அமைந்த கர்நாடக இசைப் பாடல்கள் :

பாடல் இயற்றியவர் பாடல் வகை
ஸ்மரனே புரந்தரதாசர் கீர்த்தனை
மனசா தியாகையர்  கீர்த்தனை
பத்மநாப  ஸ்வாதித்திருநாள் கீர்த்தனை
ஜகதுராம ஊத்துக்காடு வெங்கடசுப்பையர்  கீர்த்தனை

‘மலையமாருதம்’ ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள் :

1. 1985ல் வெளியான “தென்றலே என்னைத் தொடு” என்ற திரைபடத்தில் வைரமுத்து இயற்றி, இளையராஜா இசையமைத்து K.J.யேசுதாஸ், உமா ரமணன் பாடிய கண்மணி நீ வரக் காத்திருந்தேன் என்ற பாடல் மலைய மாருத்த்தில் இருந்தது.

2. 1983ல் வெளியான ‘ஒரு ஓடை நதியாகிறது...’ என்ற படத்தில் இளையராஜா இசையமைக்க தீபன் சக்ரவர்த்தியும் உமா ரமணனும் இணைந்து பாடிய ” தென்றல் என்னை முத்தமிட்டது...” என்ற பாடல்.

<< Previous Index >> Next