HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events   |    Music Review  |      Photo gallery      |    Videos    |      Audios      |      Top 10 Songs      |    New Releases    |    Tamil Books   
   Fun in Music     |       Lyrics       |   Upcoming Events      |   Specials   |    Partners     |    CT - Food Festival    |     Gallery     |     Contact us
PROFILES     Music      |     Cinema      |     Dance      |     Drama      |     Television      |     Radio      |     Variety      |     Mimicrys      |     Kavidhai        

ராகங்களும் திரைப்படப் பாடல்களும்

ஜன்ய ராகங்களில்

37. “வசந்தா / லலிதா”

இவையிரண்டும் ஒரே ராகம் தான்! ஆனால் நடை முறையில் வேறு வேறு ராகங்களாக்க் குறுப்பிடப்படுகின்றன. ஏனெனில், ‘வசந்தா’, 17ஆவது ‘மேளகர்த்தா’ வான ‘சூரியகாந்தம்’ என்ற ராகத்தின் ஜன்யமென்றும், ‘லலிதா’ 15ஆவது ‘மேளகர்த்தா’வான ‘மாயா மாளவ கௌள’ ராகத்தின் ஜன்யமென்றும் கருதப்படுவதுதான்.

உபாங்க வகையைச் சேர்ந்த இந்த ராகம் அந்தி வேளையில் பாட உகந்தது.

பெண்பால் ராகமான இதன் ஸ்வரங்களாவன :

ஷட்ஜமம்,சுத்த ரிஷபம், அந்தர காந்தாரம்,சுத்த மத்யமம், சதுஸ்ருதி தைவதம் மற்றும் காகலி நிஷாதம்.

ஆரோஹணம் :   (வசந்தா) ஸ ம க ம த நி ஸ்
  :   (லலிதா) ஸ க ம த நி ஸ்
அவரோஹணம் :   (வசந்தா) ஸ் நி த ம க ரி ஸ
  :   (லலிதா) ஸ் நி த ம க ரி ஸ

கர்நாடக இசைப் பாடல்கள் :

பாடல் இயற்றியவர் பாடல் வகை
நாராயணா புரந்தரதாசர் கீர்த்தனை
கொடுபேகே புரந்தரதாசர் கீர்த்தனை
சீதம்மா மாயம்மா தியாகையர் கீர்த்தனை
நீலமலர் கோலத்திரு  ஊத்துக்காடு வெங்கடசுப்பையர்  கீர்த்தனை
தரிசனம் முத்துதாண்டவர் கீர்த்தனை
நடனம் ஆடினார் பாபநாசம் சிவன்  பதம்

லலிதா

1. 1988ல் வெளிவந்த “உன்னால் முடியும் தம்பி” என்ற படத்தில் இளையராஜா இசையமைப்பில் S.P.பாலசுப்ரமணியம், K.S.சித்ரா இணைந்து பாடிய... “இதழில் கதையெழுதும் நேரம் இது...” என்ற பாடல் லலிதா ராகத்தில் அமைந்திருந்தது.

 
<< Previous Index >> Next