HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events   |    Music Review  |      Photo gallery      |    Videos    |      Audios      |      Top 10 Songs      |    New Releases    |    Tamil Books   
   Fun in Music     |       Lyrics       |   Upcoming Events      |   Specials   |    Partners     |    CT - Food Festival    |     Gallery     |     Contact us
PROFILES     Music      |     Cinema      |     Dance      |     Drama      |     Television      |     Radio      |     Variety      |     Mimicrys      |     Kavidhai        

ராகங்களும் திரைப்படப் பாடல்களும்

ஜன்ய ராகங்களில்

39. “சந்திர கௌன்ஸ்”

இந்த ராகத்தின் பழைய பெயர். ‘கதரம்’ ஹிந்துஸ்தானி இசை மரபில் இதை ‘சந்த்ரகௌஞ்ச்’ என்றும் ‘சந்த்ரகோஷ்’ என்றும் அழைப்பர்.

உண்மையில் இது21ஆவது ‘மேளகர்த்தா’ வான ‘கீர்வாணி’யின் ஜன்ய ராகமாகும்.

வைகாசி மாதப் பவுர்ணமி அன்று நிலா தோன்றும் அந்தி வேளையில் கடற்கரையருகே அமர்ந்து இசைத்தால் இந்த ராகத்தின் ஒலியலைகள், கடற்பரப்பின் மீது காந்த அலைகளைக் கூட தோற்றுவிக்குமாம்! அதனால் கவரப் பட்டு கடலடியில் கிடக்கும் ‘வலம்புரிச் சங்குகள்’ மேலெழுந்து வருமாம்!

சோகச்சுவையுடன் கூடிய பெண்பால் ராகமான “சந்திர கௌன்ஸின்” ஸ்வரங்களாவன :
ஷட்ஜமம், சாதாரண காந்தாரம், சுத்த மத்யமம்,சுத்த தைவதம் மற்றும் காகலி நிஷாதம்.
(ரிஷபம்,பஞ்சமம் இல்லை)

ஆரோஹணம்         :    ஸ க ம த நி ஸ்
அவரோஹணம்     :     ஸ் நி த ம க ஸ

1. 1961ல் வெளியான ‘பாக்யலட்சுமி’ என்ற படத்தில், விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைக்க, P.சுசீலா பாடிய... ‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி...’ என்ற பாடல், ‘சந்திரகௌன்ஸ்’ ராகம்!

2. 1984ல் வெளிவந்த “வைதேகி காத்திருந்தாள்” என்ற படத்தில் இளையராஜா இசையமைப்பில் S.ஜானகி பாடிய ‘அழகு மலராட...’ என்ற பாடல்.

3. 1985ல் வெளிவந்த ‘ராஜாத்தி ரோஜாக்கிளி’ – என்ற படத்தில் சந்திரபோஸ் இசையமைக்க S.P.பாலசுப்ரமணியம் பாடிய ‘யாரோ மன்மதன்’ என்ற பாடல்.

 
<< Previous Index >> Next