HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events   |    Music Review  |      Photo gallery      |    Videos    |      Audios      |      Top 10 Songs      |    New Releases    |    Tamil Books   
   Fun in Music     |       Lyrics       |   Upcoming Events      |   Specials   |    Partners     |    CT - Food Festival    |     Gallery     |     Contact us
PROFILES     Music      |     Cinema      |     Dance      |     Drama      |     Television      |     Radio      |     Variety      |     Mimicrys      |     Kavidhai        

ராகங்களும் திரைப்படப் பாடல்களும்

ஜன்ய ராகங்களில்

40. “நாத நாமக்ரியா”

இது 15ஆவது ‘மேளகர்த்தா’வாகிய ‘மாயா மாளவ கௌள’ ராகத்தின் ஜன்ய ராகமாகும்.
தமிழிசை மரபில் இதற்கு ‘சீகாமரப் பண்’ என்று பெயர்.

‘நிஷாதாந்த்ய’ ராகமெனப்படும் இது அதிகாலையில் இசைக்கப் பொருத்தமானது.

ஆண்பால் ராகமாகிய ‘நாத நாமக்ரியா’வின் இதன் ஸ்வரங்களாவன :

ஷட்ஜமம், சுத்த ரிஷபம்,அந்தர காந்தாரம்,சுத்த மத்யமம், பஞ்சமம், சுத்த தைவதம் மற்றும் காகலி நிஷாதம்.

ஆரோஹணம்                 :   நி ஸ ரி க ம ப த நி
அவரோஹணம்             :   நி த ப ம க ரி ஸ

நாத நாமக்ரியா’ ராகத்தில் அமைந்துள்ள கர்நாடக இசைப் பாடல்கள் :

பாடல்  இயற்றியவர் பாடல் வகை
பாஹி கௌரீச புரந்தரதாசர் கீர்த்தனை
கருணா ஜலதீ தியாகையர்  கீர்த்தனை
நீலகண்டாய முத்துசாமி தீட்சிதர்  கீர்த்தனை
தேடியலைகிறாயே  கோபாலகிருஷ்ண பாரதியார்  கீர்த்தனை
பஜஸ்வஸ்ரீ ஊத்துக்காடு வெங்கட சுப்பையர்  கீர்த்தனை

1. 1935ல் வெளிவந்த ‘பக்த நந்தனார்’ படத்தில் K.B. சுந்தராம்பாள் பாடிய ‘சிவலோக நாதனைக் கண்டு...’ என்ற பாடல் இந்த ராகம் தான்.

2. 1978ல் வெளிவந்த ‘சட்டம் என் கையில்’ என்ற படத்தில் இளையராஜா இசையமைக்க, மலேசியா வாசுதேவன் பாடிய ‘கடைத்தேங்காயோ, வழிப் பிள்ளையாரோ’ என்ற பாடலும் ‘நாதநாமக்ரியா’ ராகம் தான்.

 
<< Previous Index >> Next