HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events   |    Music Review  |      Photo gallery      |    Videos    |      Audios      |      Top 10 Songs      |    New Releases    |    Tamil Books   
   Fun in Music     |       Lyrics       |   Upcoming Events      |   Specials   |    Partners     |    CT - Food Festival    |     Gallery     |     Contact us
PROFILES     Music      |     Cinema      |     Dance      |     Drama      |     Television      |     Radio      |     Variety      |     Mimicrys      |     Kavidhai        

ராகங்களும் திரைப்படப் பாடல்களும்

மேலும் சில ராகங்களில்

3. ‘ஆனந்த பைரவி’

இந்த ராகத்தில் தியாகையர் இயற்றிய ‘ஓ ஜெகதம்பா...’ என்ற கீர்த்தனை பிரபலமானது. பாபநாசம் சிவன் எழுதிய தனிப் பாடலான ‘அம்பா கருணை புரிவாய்’ என்ற பாடலும் அப்படியே!

அ. 1964ல் வெளிவந்த ‘கர்ணன்’ என்ற திரைப்படத்தில் விஸ்வநாதன் ராம மூர்த்தி இசையமைப்பில் சூலமங்கலம் ராஜலட்சுமி பாடிய “போய் வா மகளே போய் வா புன்னகை சுமந்து போய் வா” என்ற பாடல் ஆனந்த பைரவி ராகத்தில் தான் அமைந்திருந்தது.

ஆ. 1975ல் வெளியான ‘ஸ்வாமி ஐயப்பன்’ என்ற படத்தில் தேவராஜன் இசையமைக்க T.M.சவுந்தர ராஜன் பாடிய ‘சபரிமலையில் வண்ணச் சந்திரோதயம்’ என்ற பாடலும் இந்த ராகம் தான்.

 
<< Previous Index >> Next