HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
Quick Links     News & Events  | Music Review  |  Photo gallery  |  Videos |  Audios | Top 10 Songs  |   New Releases | Lyrics  |  Fun in Music | Tamil Books | Specials |
PROFILES     Music  |  Cinema  |  Dance  |  Drama  | TV  |  Radio  | Variety  |  Mimicrys  | Kavidhai  |  Partners  |  Upcoming Events  |  Logos  |  Contact us  |

முப்பெரும் பாடல்கள்

2. பாஞ்சாலி சபதம்

சூதாட்டச் சருக்கம்

35. சகுனி வல்லுக்கு அழைத்தல்

 

வேறு

‘சாத்திரம் பேசுகின் றாய்’-எனத்
தழல்படு விழியொடு சகுனிசொல் வான்;
‘கோத்திரக் குலமன் னர்-பிறர்
குறைபடத் தம்புகழ் கூறுவ ரோ?
நாத்திறன் மிகஉடை யாய்!-எனில்
நம்மவர் காத்திடும் பழவழக் கை
மாத்திரம் மறந்துவிட் டாய்;-மன்னர்
வல்லினுக் கழைத்திடல் மறுப்பதுண்டோ’

‘தேர்ந்தவன் வென்றிடு வான்;-தொழில்
தேர்ச்சி இல் லாதவன் தோற்றிடு வான்;
நேர்ந்திடும் வாட்போரில்-குத்து
நெறி அறிந் தவன்வெலப் பிறனழி வான்;
ஓர்ந்திடு சாத்திரப் போர் தனில்
உணர்ந்தவன் வென்றிட,உணரா தான்
சோர்ந்தழி வெய்திடு வான்;இவை
சூதென்றும் சதிஎன்றும் சொல்வா ரோ?

‘வல்லவன் வென்றிடு வான்:-தொழில்
வன்மை இலாதவன் தோற்றிடு வான்;
நல்லவ னல்லா தான்-என
நாண மிலார்சொலுங் கதைவேண் டா;
வல்லமர் செய்திட வே-இந்த
மன்னர் முன்னேநினை அழைத்துவிட்டேன்;
சொல்லுக வருவதுண் டேல்-மனத்
துணி விலை யேலதுஞ் சொல்லு’கென் றான்.

<< Previous Index >> Next