HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
Quick Links     News & Events  | Music Review  |  Photo gallery  |  Videos |  Audios | Top 10 Songs  |   New Releases | Lyrics  |  Fun in Music | Tamil Books | Specials |
PROFILES     Music  |  Cinema  |  Dance  |  Drama  | TV  |  Radio  | Variety  |  Mimicrys  | Kavidhai  |  Partners  |  Upcoming Events  |  Logos  |  Contact us  |

முப்பெரும் பாடல்கள்

3. குயில் பாட்டு

5. குயிலும் குரங்கும்

 

மற்றைநாட் கண்ட மரத்தே குயிலில்லை.
சுற்றுமுற்றும் பார்த்தும் துடித்து வருகையிலே-
வஞ்சனையே!பெண்மையே!மன்மதனாம் பொய்த்தேவே!
நெஞ்சகமே!தொல்விதியின் நீதியே!பாழுலகே!-
கண்ணாலே நான்கண்ட காட்சிதனை என்னுரைப்பேன்!
பெண்ணால் அறிவிழக்கும் பித்தரெலாங் கேண்மினோ!
காதலினைப் போற்றுங் கவிஞரெலாங் கேண்மினோ!
மாதரெலாங் கேண்மினோ! வல்விதியே கேளாய் நீ!
மாயக் குயிலோர் மரக்கிளையில் வீற்றிருந்தே
பாயும் விழிநீர் பதைக்குஞ் சிறியவுடல்

விம்மிப் பரிந்துசொலும் வெந்துய்ச்சொல் கொண்டதுவாய்,
அம்மவோ!மற்றாங்கோர் ஆண்குரங்கு தன்னுடனே
ஏதேதோ கூறி இரங்கும் நிலைகண்டேன்,
துதேது?நன்றேது?செய்கைந் தௌவிவேது?
அந்தக் கணமே அதையுங் குரங்கைனையும்
சிந்தக் கருதி உடைவாளிற் கைசேர்த்தேன்.
கொன்றுவிடு முன்னே குயிலுரைக்கும் வார்த்தைகளை
நின்று சற்றே கேட்பதற்கென் நெஞ்சம் விரும்பிடவும்,
ஆங்கவற்றின் கண்ணில் அகப்படா வாறருகே
ஓங்கு மரத்தின்பால் ஒளிந்துநின்று கேட்கையிலே,

பேடைக் குயிலிதனைப் பேசியது;-“வானரரே!
ஈடறியா மேன்மையழ கேய்ந்தவரே! பெண்மைதான்
எப்பிறப்புக் கொண்டாலும்,ஏந்தலே!நின்னழகைத்
தப்புமோ?மையல் தடுக்குந் தரமாமோ?
மண்ணிலுயிர்க் கெல்லாந் தலைவரென மானிடரே,
எண்ணிநின்றார் தம்மை;எனிலொருகால்,ஊர்வகுத்தல்
கோயில் அரசு,குடிவகுப்புப் போன் றசில
வாயிலிலே,அந்த மதிர் உயர்வெனலாம்.
மேனி யழனினிலும் விண்டுரைக்கும் வார்த்தையிலும்
கூனி யிருக்கும் கொலுநேர்த்தி தன்னிலுமே,

வானரர்தஞ் சாதிக்கு மாந்தர்நிக ராவாரோ?
ஆன வரையும் அவர்முயன்று பார்த்தாலும்,
பட்டுமயிர் மூடப் படாத தமதுடலை
எட்டுடையால் மூடி எதிருமக்கு வந்தாலும்,
மீசையையும் தாடியையும் விந்தைசெய்து வானரர்தம்
ஆசை முகத்தினைப்போ லாக்க முயன்றிடினும்
ஆடிக் குதிக்கும் அழகிலுமை நேர்வதற்கே
கூடிக் குடித்துக் குதித்தாலும்,கோபுரத்தில்
ஏறத் தெரியாமல் ஏணிவைத்துச் சென்றாலும்,
வேறெத்தைச் செய்தாலும்,வேகமுறப் பாய்வதிலே

வான ரர்போ லாவரோ? வாலுக்குப் போவதெங்கே?
ஈனமுறுங் கச்சை இதற்கு நிகராமோ?
பாகையிலே வாலிருக்கப் பாத்ததுண்டு,கந்தைபோல்;
வேகமுறத் தாவுகையில் வீசி எழுவதற்கே
தெய்வங் கொடுத்த திருவாலைப் போலாமோ?
சைவசுத்த போசனமும் சாதுரியப் பார்வைகளும்-
வானரர்போற் சாதியொன்று மண்ணுலகின் மீதுளதோ?
வானரர் தம்டுள்ளே மணிபோல் உமையடைந்தேன்.
பிச்சைப் பறவைப் பிறப்பிலே தோன்றிடினும்,
நிச்சயமா முன்புரிந்த நேமத் தவங்களினால்

தேவரீர் காதல்பெறுஞ் சீர்த்தி கொண்டேன் தம்மிடத்தே
ஆவலினாற் பாடுகின்றேன்,ஆரியரே கேட்டருள்வீர்,”
(வானரப் பேச்சினிலே மைக்குயிலி பேசியதை
யானறிந்து கொண்டுவிட்டேன்,யாதோ ஒருதிறத்தால்)

காதல்,காதல்,காதல்;
காதல் போயிற் காதல் போயிற்
சாதல்,சாதல்,சாதல்
முதலியன (குயிலின் பாட்டு)

நீசக் குயிலும் நெருப்புச் சுவைக்குரலில்
ஆசை ததும்பி அமுதூறப் பாடியதே:-
காட்டில் விலங்கறியும் கைக்குழந்தை தானறியும்,
பாட்டின் சவையதனைப் பாம்பறியும் என்றுரைப்பார்.
வற்றற் குரங்கு மதிமயங்கிக் கள்ளினிலே
முற்றும் வெறிபோல் முழுவெறிகொண் டாங்ஙனே,

தாவிக் குதிப்பதுவுந் தாளங்கள் போடுவதும்
“ஆவி யுருகுதடி,ஆஹாஹா!”என்பதுவும்,
கண்ணைச் சிமிட்டுவதும்,காலாலுங் கையாலும்
மண்ணைப் பிறாண்டியெங்கும் வாரி யிறைப்பதுவும்,
“ஆசைக் குயிலே!அரும் பொருளே!தெய்வதமே!
பேச முடியாப் பெருங்காதல் கொண்டுவிட்டேன்,
காதலில்லை யானாற் கணத்திலே சாதலென்றாய்;
காதலினால் சாகுங் கதியினிலே என்னை வைத்தாய்,
எப்பொழுதும் நின்னை இனிப்விரிவ தாற்றுகிலேன்,
இப்பொழுதே நின்னைமுத்த மிட்டுக் களியுறுவேன்”

என்றுபல பேசுவதும் என்னுயிரேப் புண்செயவே,
கொன்றுவிட எண்ணிக் குரங்கின்மேல் வீசினேன்
கைவாளை யாங்கே:கனவோ?நனவுகொலோ?
தெய்வ வலியோ?சிறுகுரங்கென் வாளுக்குத்
தப்பி,முகஞ்சுளித்துத் தாவியொளித்திடவும்,

ஒப்பிலா மாயத் தொருகயிலுந் தான்மறைய,
சோலைப் பறவை தொகைதொகையாத் தாமொலிக்க
மேலைச் செயலறியா வெள்ள றிவிற் பேதையேன்
தட்டித் தடுமாறிச் சார்பனைத்துந் தேடியுமே
குட்டிப் பிசாசக் குயிலையெங்கும் காணவில்லை.

<< Previous Index >> Next