HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
Quick Links     News & Events  | Music Review  |  Photo gallery  |  Videos |  Audios | Top 10 Songs  |   New Releases | Lyrics  |  Fun in Music | Tamil Books | Specials |
PROFILES     Music  |  Cinema  |  Dance  |  Drama  | TV  |  Radio  | Variety  |  Mimicrys  | Kavidhai  |  Partners  |  Upcoming Events  |  Logos  |  Contact us  |

தேசீய கீதங்கள்

5. தேசீயத் தலைவர்கள்
42.குரு கோவிந்தர்
ஆயிரத் தெழுநூற் றைம்பத் தாறு
விக்ரம னாண்டு, வீரருக் கமுதாம்
ஆனந்த புரத்தி லார்ந்தினி திருந்தனன்;
பாஞ்சா லத்துப் படர்தரு சிங்கக்
குலத்தினை வகுத்த குருமணி யாவான்.
5


ஞானப் பெருங்கடல்,நல்லிசைக் கவிஞன்,
வானம்வீழ்ந் துதிரினும் வாள்கொடு தடுக்கும்
வீரர் நாயகன்,மேதினி காத்த
குருகோ விந்த சிங்கமாங்க கோமகன்,
அவன் திருக் கட்டளை அறிந்துபல் திசையினும்,
10


பாஞ்சா லத்துறு படைவலோர் நாடொறும்
நாடொறும் வந்து நண்ணுகின் றாரால்,
ஆனந்த புரத்தில் ஆயிர மாயிரம்
வீரர்கள் குருவின் விருப்பினைத் தெரிவான்
கூடிவந் தெய்தினர்,கொழுபொழி லினங்களும்
15


புன்னகை புனைந்த புதுமலர்த் தொகுதியும்
பைந்நிறம் விரிந்த பழனக் காட்சியும்,
‘நல்வர வாகுக நம்மனோர் வரவு’என்று
ஆசிகள் கூறி ஆர்ப்பன போன்ற
புண்ணிய நாளிற் புகழ்வளர் குரவன்
20


திருமொழி கேட்கச் செறிந்தனர் சீடர்கள்,
"யாதவன் கூறும்? என்னெமக் கருளும்?
எப்பணி விதித்தெமது ஏழேழ் பிறவியும்
இன்புடைத் தாக்கும்?"எனப்பல கருதி,
மாலோன் திருமுனர் வந்துகண் ணுயர்த்தே
25


ஆக்கினை தெரிவான் ஆவலொடு துடிக்கும்
தேவரை யொத்தனர்,திடுக்கெனப் பீடத்து
ஏறிநின் றதுகாண்!இளமையும் திறலும்
ஆதிபத் தகைமையும் அமைந்ததோர் உருவம்
விழிகளில் தெய்வப் பெருங்கனல் வீசிட
30


திருமுடி சூழ்ந்தோர் தேசுகாத் திருப்ப,
தூக்கிய தரத்தில் சுடருமிழ்ந் திருந்தது
கூறநா நடுங்குமோர் கொற்றக் கூர்வாள்.
என்ணிலா வீரர் இவ்வுரு நோக்கி,
வான்நின் றிறங்கிய மாந்திரி கன்முனர்ச்
35


சிங்க்க் கூட்டம் திகைத்திருந் தாங்கு
மோனமுற் றடங்கி முடிவணங் கினரால்,
வாள்நுனி காட்டி மாட்சியார் குரவன்
திருவுள நோக்கஞ் செப்புவன், தெய்வச்
சேயிதழசைவுறச் சினந்தோர் எரிமலை
40


குமுறுதல் போல்வெளிக் கொண்டன திருமொழி;
‘வாளிதை மனிதர் மார்பிடைக் குளிப்ப
விரும்புகின் றேன்யான்; தீர்கிலா விடாய்கொள்
தருமத் தெய்வந் தான்பல குருதிப்
பலிவிழை கின்றதால்; பக்தர்காள்!நும்மிடை
45


நெஞ்சினைக் கிழித்து நிலமிசை யுதிரம்
வீழ்த்தித் தேவியின் விடாயினைத் தவிர்ப்ப
யார்வரு கின்றீர்!" என்னலும் சீடர்கள்
நடுங்கியோர் கணம்வரை நாவெழா திருந்தனர்.
கம்மென ஓர்சிறு கணங்கழி வுற்றது.
50


ஆங்கிருந் தார்பல் லாயிர ருள்ளொரு
வீரன்முன் வந்து விளம்புவான் இஃதே;
"குருமணி! நின்னொரு கொற்றவாள் கிழிப்ப
விடாயறாத் தருமம் மேம்படு தெய்வதத்து
இரையென மாய்வன் ஏற்றருள் புரிகவே!"
55


புன்னகை மலர்ந்தது புனித நல் வதனம்
கோயிலுள் அவனைக் குரவர்கோன் கொடுசெல,
மற்றதன் நின்றோர் மடுவின்வந் தாலெனக்
குருதிநீர் பாயக் குழாத்தினர் கண்டனர்.
பார்மின்? சற்குரு பளீரெனக் கோயிலின்
60


வெளிப்போந் தாங்கு மேவினோர் முன்னம்
முதற்பலி முடிந்து முகமலர்ந் தோனாய்
மின்னெனப் பாய்ந்து மீண்டுவந் துற்றனன்.
மீண்டுமவ் வுதிரவாள் விண்வழி தூக்கிப்
பின்வரு மொழிகள் பேசுவன் குரவர்கோன்;
65


"மானுடர் நெஞ்சிலிவ் வாளினைப் பதிக்கச்
சித்தம்நான் கொண்டேன்;தேவிதான் பின்னுமோர்
பலிகேட் கின்றாள் பக்தர்காள்! நும்முளே
இன்னும் இங் கொருவன் இரத்தமே தந்துஇக்
காளியைத் தாகங் கழித்திடத் துணிவோன்.
70


எவனுளன்?" எனலும் இன்னுமோர் துணிவுடை
வீரன்முன் நின்று விருப்பினை உணர்த்தினன்.
இவனையுங் கோயிலுள் இனிதழைத் தேகி
இரண்டாம் பலிமுடித் தீண்டினன் குரவன்;
குருதியைக் கண்டு குழர்த்தினர் நடுங்கினர்.
75


இங்ஙன மீண்டுமே இயற்றிப்
பலியோ ரைந்து பரமனங் களித்தனன்.
அறத்தினைத் தமதோ ரறிவினாற் கொண்ட
மட்டிலே மானிடர் மாண்பெற லாகார்,
அறமது தழைப்ப நெஞ்சகம் காட்டி
80


வாட்குத்து ஏற்று மாய்பவர் பெரியோர்
அவரே மெய்ம்மையோர்;முத்தரும் அவரே.
தோன்றுநூ றாயிரம் தொண்டர் தம்முளே
அத்தகை நல்லரை அறிகுதல் வேண்டியே
தண்ணருட் கடலாந் தகவுயர் குரவன்
85


கொடுமைசேர் சோதனை புரிந்திடல் குறித்தனன்;
அன்பின் மிகையால் ஆருயிர் நல்குவோர்
ஐவரைக் கண்டபின் அவ்விய லுடையார்
எண்ணில ருளரெனத் துணிந்து அன்பு எய்தினன்.
வெய்யசெங் குருதியின் வீழ்ந்துதா மிறந்து
90


சொர்க்கமுற் றாசெனத் தொண்டர்கொண்டிருக்கும்
ஐந்துநன் மணியெனும் ஐந்துமுத் தரையும்
கோயிலு ளிருந்துபே ரவைமுனர்க் கொணர்ந்தான்!
ஆர்த்தனர் தொண்டர்!அருவியப் பெய்தினர்!
விழிகளைத் துளைத்து மீளவும் நோக்கினர்!
95


"ஜயஜய குருமணி ஜயகுரு சிங்கம்!"
எனப்பல வாழிகள் இசைத்தனர். ஆடினர்
அப்போழ் தின்னருள் அவதரித் தனையான்.
நற்சுடர்ப் பரிதி நகைபுரிந் தாங்கு
குறுநகை புரிந்து குறையுறு முத்தர்
100


ஐவர்கள் தம்மையும் அகமுறத் தழுவி
ஆசிகள் கூறி அவையினை நோக்கிக்
கடல்முழக் கென்ன முழங்கவன் காணீர்.
"காளியும் நமது கனகநன் னாட்டுத்
தேவியும் ஒன்றெனத் தேர்ந்தநல் அன்பர்காள்!
105


நடுக்கம் நீரெய்த நான்ஐம் முறையும்
பலியிடச் சென்றது, பவனை மன்ற
என்கரத் தாற்கொலோ நும்முயி ரெடுப்பன்?
ஐம்முறை தானம் அன்பரை மறைத்து நும்
நெஞ்சகச் சோதனை நிகழ்த்தினன் யானே!
110


தாய்மணி நாட்டின் உண்மைத் தனயர்நீர்
என்பது தெளிந்தேன். என்கர வாளால்
அறுத்ததுஇங்கு இன்றுஐந் தாடுகள் காண்பீர்;
சோதனை வழியினுந் துணிவினைக் கண்டேன்;
களித்ததென் நெஞ்சம்; கழிந்தன கவலைகள்
115


குருகோ விந்தன் கொண்டதோர் தருமம்
‘சீடர்தம் மார்க்கம்’எனப்புகழ் சிறந்தது
இன்றும்அம் மார்க்கத் திருப்பவர் தம்பெயர்
‘காலசா’ என்ப. ‘காலசா’ எனுமொழி
முத்தர்தம் சங்க முறையெனும் பொருளது
120


முத்தர்தம் சபைக்கு மூலர்க ளாகமற்று
ஐவரன் னோர்தமை அருளினன் ஆரியன்.
சமைந்தது‘காலசா’ எனும் பெயர்ச் சங்கம்.
பாரத மென்ற பழம்பெரு நாட்டினர்,
ஆவிதேய்ந் தழிந்திலர், ஆண்மையிற் குறைந்திலர்,
125


வீரமுஞ் சிரத்தையும் வீந்தில ரென்று
புவியினோர் அறியப் புரிந்தனன் முனிவன்.
அந்நாள் முகுந்தன் அவதரித் தாங்கு,ஓர்
தெய்விகத் தலைவன் சீருறத் தோன்றி
மண்மா சகன்ற வான்படு சொற்களால்
130


எழுப்பிடும் காலை,இறந்துதான் கிடக்கிலள்.
இளமையும் துணிவும் இசைந்துநம் அன்னை;
சாதியின் மானந் தாங்கமுற் படுவளென்று
உலகினோர ரறிவிடை யுறுத்தினன் முனிவன்.
ஐம்பெரும் பூதத் தகிலமே சமைத்த
135


முன்னவ னொப்ப முனிவனும ஐந்து
சீடர்கள் மூலமாத் தேசுறு பாரதச்
சாதியை வகுத்தனன், தழைத்தது தருமம்
கொடுங்கோல் பற்றிய புன்கை குரிசிலர்
நடுங்குவ ராயினர்; நகைத்தனள் சுதந்திரை
140


ஆயிரத் தெழுநூற் றைம்பத் தாறு
விக்கிர மாக்க னாண்டி னில், வியன்புகழ்க்
குருகோ விந்தன் கொற்றமார் சீடரைக்
கூட்டியே தெய்வக் கொலுவொன் றமைத்தனன்.
காண்டற் கரிய காட்சி! கவின்திகழ்
145


அரியா தனத்தில் அமர்தனன் முனிவர்கோன்
சூழ்ந்திருந் தனர்,உயிர்த் தொண்டர்தாம் ஐவரும்;
தன்திருக் கரத்தால் ஆடைகள் சார்த்தி
மாலைகள் சூட்டி மதிப்புற இருத்திக்
கண்மணி போன்றார் ஐவர்மேற் கனிந்து
150


குழைவுற வாழ்த்திக் குழாத்தினை நோக்கி,
காண்டிரோ! முதலாங் "காலசா" என்றனன்;
நாடும் தருமமும் நன்கிதிற் காப்பான்
அமைந்ததிச் சங்கம் அறிமின்நீர் என்றான்.
அருகினி லோடிய ஆற்றலில்நின் றையன்
155


இரும்புச் சிறுகலத் தின்னீர் கொணர்ந்து
வாள்முனை கொண்டு மற்றதைக் கலக்கி
மந்திர மோதினன், மனத்தினை யடக்கிச்
சித்தமே முழுதுஞ் சிவத்திடை யாக்கிச்
சபமுரைத் திட்டான். சயப்பெருந் திரு.அக்
160


கொலுமுனர் வந்து குதித்துநின் றிட்டாள்.
ஆற்றுநீர் தனையோ அடித்ததத் திருவாள்
அயர்ந்துபோய் நின்ற அரும்புகழ் பாரதச்
சாதியின் திறல்கள் தம்மையே இயக்கி
நல்லுயிர் நல்கினன்,நாடெலாம் இயங்கின.
165


தவமுடை ஐவரைத் தன்முனர் நிறுத்தி
மந்திர நீரை மாசறத் தெளித்து
அருள்மய மாகி அவர்விழி தீண்டினன்;
பார்மினோ உலகீர்! பரமனங் கரத்தால்
அவர்விழி தீண்டிய அக்கணத் தன்றே
170


நாடனைத் திற்கும் நல்வழி திறந்தது!
சீடர்க ளனைவருந் தீட்சையிஃ தடைந்தனர்.
ஐயன் சொல்வான்; "அன்பர்காள்!நீவிர்
செய்திடப் பெற்ற தீட்சையின் நாமம்
‘அமிர்தம்’என் றறிமின் ‘அரும்பே றாம்இது
175


பெற்றார் யாவரும் பேரருள் பெற்றார்,
நுமக்கினித் தருமம் நுவன்றிடக் கேண்மின்,
ஒன்றாம் கடவுள், உலகிடைத் தோன்றிய
மானிட ரெல்லாஞ் சோதரர்; மானிடர்
சமத்துவ முடையார்; சுதந்திரஞ் சார்ந்தவர்
180


சீடர்காள்! குலத்தினும் செயலினும் அனைத்தினும்
இக்கணந் தொட்டுநீர் யாவரும் ஒன்றே,
பிரிவுகள் துடைப்பீர்! பிரிதலே சாதல்,
ஆரியர் சாதியுள் ஆயிரஞ் சாதி
வகுப்பவர் வகுத்து மாய்க, அனைவரும்
185


தருமம்,கடவுள்,சத்தியம்,சுதந்திரம்
என்பவை போற்ற எழுந்திடும் வீரச்
சாதியொன் றனையே சார்ந்தோ ராவீர்
அநீதியும், கொடுமையும் அழித்திடுஞ் சாதி;
மழித்திட லறியா வன்முகச் சாதி;
190


இரும்புமுத் திரையும் இறுகிய கச்சையும்
கையினில் வாளும் கழன்றிடாச் சாதி;
சோதர நட்புத் தொடர்ந்திடு சாதி;
அரசன் இல்லாது தெய்வமே யரசா
மானிடர் துணைவரா மறமே பகையாக்
195


குடியர சியற்றுங் கொள்கையார் சாதி;
அறத்தினை வெறுக்கிலீர்! மறத்தினைப் பொறுக்கிலீர்!
தாய்த்திரு நாட்டைச் சந்ததம் போற்றிப்
புகழொடு வாழ்மின்! புகழொடு வாழ்மின்;
என்றுரைத் தையன் இன்புற வாழ்த்தினன்;
200


அவனடி போற்றி ஆர்த்தனர் சீடர்கள்;
குருகோ விந்தக் கோமகன் நாட்டிய
கொடிஉயர்ந்த தசையக் குவலயம் புகழ்ந்தது;
ஆடி மாய்ந்தது அரங்கசீப் ஆட்சி
204
<< Previous Index >> Next