|
2. வான் சிறப்பு - திருக்குறள்
|
|
| 1. |
வான்நின்று
உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. |
 |
|
2. |
துப்பார்க்குத்
துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை. |
 |
|
3. |
விண்இன்று
பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி. |
 |
|
4. |
ஏரின் உழாஅர்
உழவர் புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால். |
 |
|
5. |
கெடுப்பதூஉங்
கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை. |
 |
|
6. |
விசும்பின்
துளிவீழின் அல்லால்மற்று ஆங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது. |
 |
|
7. |
நெடுங்கடலும்
தன்நீர்மை குன்றும் தடிந்துஎழிலி
தான்நல்கா தாகி விடின். |
 |
|
8. |
சிறப்பொடு பூசனை
செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. |
 |
|
9. |
தானம்
தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்காது எனின். |
 |
|
10. |
நீர்இன்று
அமையாது உலகுஎனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு. |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |