|
4.
அறன்வலியுறுத்தல் -
திருக்குறள்
|
|
| 1. |
சிறப்பு
ஈனும்; செல்வமும் ஈனும்;
அறத்தின்ஊஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு? |
 |
|
2. |
அறத்தின்ஊங்கு
ஆக்கமும் இல்லை; அதனை
மறத்தலின் ஊங்குஇல்லை கேடு. |
 |
|
3. |
ஒல்லும்
வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வா யெல்லாஞ் செயல். |
 |
|
4. |
மனத்துக்கண்
மாசிலன் ஆதல்; அனைத்துஅறன்;
ஆகுல நீர பிற. |
 |
|
5. |
அழுக்காறு
அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம். |
 |
|
6. |
அன்றுஅறிவாம்
என்னாது அறஞ்செய்க மற்றுஅது
பொன்றும்கால் பொன்றாத் துணை. |
 |
|
7. |
அறத்தாறு இதுஎன
வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. |
 |
|
8. |
வீழ்நாள்
படாஅமை நன்றுஆற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல். |
 |
|
9. |
அறத்தான்
வருவதே இன்பம்:மற் றெல்லாம்
புறத்த; புகழும் இல. |
 |
|
10. |
செயற்பாலது
ஓரும் அறனே: ஒருவற்கு
உயற்பால தோரும் பழி. |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |