|
6.
வாழ்க்கைத் துணைநலம் -
திருக்குறள்
|
|
| 1. |
மனைத்தக்க
மாண்புஉடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. |
 |
|
2. |
மனைமாட்சி
இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித்து ஆயினும் இல். |
 |
|
3. |
இல்லதென்
இல்லவள் மாண்பானால்; உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை? |
 |
|
4. |
பெண்ணின்
பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்? |
 |
|
5. |
தெய்வம்
தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்எனப் பெய்யும் மழை. |
 |
|
6. |
தற்காத்துத்
தற்கொண்டான் பேணித் தகைசான்ற
சொல்காத்துச் சோர்விலாள் பெண். |
 |
|
7. |
சிறைகாக்கும்
காப்புஎவன் செய்யும்? மகளிர்
நிறைகாக்குங் காப்பே தலை. |
 |
|
8. |
பெற்றால்
பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு. |
 |
|
9. |
புகழ்புரிந்த
இல்இலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை. |
 |
|
10. |
மங்கலம் என்ப
மனைமாட்சி மற்றுஅதன்
நன்கலம் நன்மக்கட் பேறு. |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |