Thirukkural
7. மக்கட்பேறு - திருக்குறள்  
1. பெறுமவற்றுள் யாம்அறிவது இல்லை அறிவுஅறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.
2. எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கள் பெறின்.
3. தம்பொருள் என்பதம் மக்கள்; அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.
4. அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.
5. மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொல்கேட்டல் இன்பம் செவிக்கு.
6. குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.
7. தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல்.
8. தம்மின்தம் மக்கள் அறிவுடமை மாநிலத்து
மன்னுயிர்க்கு எல்லாம் இனிது.
9. ஈன்ற பொழுதின் பெரிதுஉவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
10. மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.
  திருக்குறள் - தொகுப்பு