|
8.
அன்புடைமை -
திருக்குறள்
|
|
| 1. |
அன்பிற்கும்
உண்டோ அடைக்குந்தாழ்? ஆர்வலர்
புன்கண்நீர் பூசல் தரும். |
 |
|
2. |
அன்பிலார்
எல்லாம் தமக்குரியர்: அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு. |
 |
|
3. |
அன்போடு இயைந்த
வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு. |
 |
|
4. |
அன்புஈனும்
ஆர்வம் உடமை: அதுஈனும்
நண்புஎன்னும் நாடாச் சிறப்பு. |
 |
|
5. |
அன்புற்று
அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு. |
 |
|
6. |
அறத்திற்கே
அன்புசார்பு என்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை. |
 |
|
7. |
என்பு இலதனை
வெயில்போலக் காயுமே
அன்பு இலதனை அறம். |
 |
|
8. |
அன்பகத்து
இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரம்தளிர்த் தற்று. |
 |
|
9. |
புறத்துறுப்பு
எல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு? |
 |
|
10. |
அன்பின் வழியது
உயிர்நிலை அஃதுஇலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு. |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |