|
10.
இனியவை கூறல்
- திருக்குறள்
|
|
| 1. |
இன்சொலால் ஈரம்
அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். |
 |
|
2. |
அகன்அமர்ந்து
ஈதலின் நன்றே முகன்அமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின். |
 |
|
3. |
முகத்தான்
அமர்ந்துஇனிது நோக்கி அகத்தான்ஆம்
இன்சொ லினதே அறம். |
 |
|
4. |
துன்புறூஉம்
துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு. |
 |
|
5. |
பணிவுடையன்
இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணிஅல்ல மற்றுப் பிற. |
 |
|
6. |
அல்லவை தேய
அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின். |
 |
|
7. |
நயன்ஈன்று
நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல். |
 |
|
8. |
சிறுமையுள்
நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும். |
 |
|
9. |
இன்சொல்
இனிதுஈன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது? |
 |
|
10. |
இனிய உளவாக
இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று. |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |