HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
Quick Links     News & Events  | Music Review  |  Photo gallery  |  Videos |  Audios | Top 10 Songs  |   New Releases | Lyrics  |  Fun in Music | Tamil Books | Specials |
PROFILES     Music  |  Cinema  |  Dance  |  Drama  | TV  |  Radio  | Variety  |  Mimicrys  | Kavidhai  |  Partners  |  Upcoming Events  |  Logos  |  Contact us  |
107. இரவச்சம் -  திருக்குறள்  
1. கரவாது உவந்துஈயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி யுறும்.
2. இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகுஇயற்றி யான்.
3. இன்மை இடும்பை இரந்துதீர் வாம்என்னும்
வன்மையின் வன்பாட்டது இல்.
4. இடம்எல்லாம் கொள்ளாத் தகைத்தே இடம்இல்லாக்
காலும் இரவுஓல்லாச் சால்பு.
5. தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்குஇனியது இல்.
6. ஆவிற்கு நீர்என்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்தது இல்.
7. இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
கரப்பார் இரவன்மின் என்று!
8. இரவுஎன்னும் ஏமாப்புஇல் தோணி கரவுஎன்னும்
பார்தாக்கப் பக்கு விடும்.
9. இரவுஉள்ள உள்ளம் உருகும்: கரவுஉள்ள
உள்ளதூஉம் இன்றிக் கெடும்.
10. கரப்பவர்க்கு யாங்குஔதக்கும் கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர்.
  திருக்குறள் - தொகுப்பு