HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
Quick Links     News & Events  | Music Review  |  Photo gallery  |  Videos |  Audios | Top 10 Songs  |   New Releases | Lyrics  |  Fun in Music | Tamil Books | Specials |
PROFILES     Music  |  Cinema  |  Dance  |  Drama  | TV  |  Radio  | Variety  |  Mimicrys  | Kavidhai  |  Partners  |  Upcoming Events  |  Logos  |  Contact us  |
108. கயமை -  திருக்குறள்  
1. மக்களே போல்வர் கயவர்: அவரன்ன
ஒப்பாரி யாம்கண்டது இல்.
2. நன்றுஅறி வாரின் கயவர் திருஉடையர்:
நெஞ்சத்து அவலம் இலர்.
3. தேவர் அனையர் கயவர் அவரும்தாம்
மேவன செய்தொழுக லான்.
4. அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.
5. அச்சமே கீழ்களது ஆசாரம்: எச்சம்
அவாஉண்டேல் உண்டாம் சிறிது.
6. அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க்கு உய்த்துஉரைக்க லான்.
7. ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுஉடைக்கும்
கூன்கையர் அல்லா தவர்க்கு.
8. சொல்லப் பயன்படுவர் சான்றோர்: கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்.
9. உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்.
10. எற்றிற்கு உரியர் கயவர்ஒன்று உற்றக்கால்
விற்றற்கு உரியர் விரைந்து.
  திருக்குறள் - தொகுப்பு