|
11.
செய்ந்நன்றி அறிதல்
- திருக்குறள்
|
|
| 1. |
செய்யாமற்
செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்ற லரிது. |
 |
|
2. |
காலத்தி
னால்செய்த நன்றி சிறிதுஎனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது. |
 |
|
3. |
பயன் தூக்கார்
செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலிற் பெரிது. |
 |
|
4. |
தினைத்துணை
நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார். |
 |
|
5. |
உதவி வரைத்தன்று
உதவி: உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து. |
 |
|
6. |
மறவற்க
மாசற்றார் கேண்மை: துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு. |
 |
|
7. |
எழுமை
எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு. |
 |
|
8. |
நன்றி மறப்பது
நன்றன்று: நன்றல்லது
அன்றே மறப்பது நன்று. |
 |
|
9. |
கொன்றன்ன இன்னா
செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும். |
 |
|
10. |
எந்நன்றி
கொன்றார்க்கும் உய்வுண்டாம்: உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு. |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |