HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
Quick Links     News & Events  | Music Review  |  Photo gallery  |  Videos |  Audios | Top 10 Songs  |   New Releases | Lyrics  |  Fun in Music | Tamil Books | Specials |
PROFILES     Music  |  Cinema  |  Dance  |  Drama  | TV  |  Radio  | Variety  |  Mimicrys  | Kavidhai  |  Partners  |  Upcoming Events  |  Logos  |  Contact us  |
115. அலரறிவுறுத்தல் -  திருக்குறள்  
1. அலர்எழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலர்அறியார் பாக்கியத் தால்.
2. மலர்அன்ன கண்ணாள் அருமை அறியாது
அலர்எமக்கு ஈந்ததுஇவ் வூர்.
3. உறாஅதோ ஊரறிந்த கௌவை? அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து.
4. கவ்வையால் கவ்விது காமம்: அதுஇன்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து.
5. களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வௌதப்படுந் தோறும் இனிது.
6. கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று.
7. ஊரவர் கௌவை எருஆக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய்.
8. நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால்
காமம் நுதுப்பேம் எனல்.
9. அலர்நாண ஒல்வதோ அஞ்சல்ஓம்பு என்றார்
பலர்நாண நீத்தக் கடை.
10. தாம்வேண்டின் நல்குவர் காதலர்: யாம்வேண்டும்
கௌவை எடுக்கும்இவ் வூர்.
  திருக்குறள் - தொகுப்பு