HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
Quick Links     News & Events  | Music Review  |  Photo gallery  |  Videos |  Audios | Top 10 Songs  |   New Releases | Lyrics  |  Fun in Music | Tamil Books | Specials |
PROFILES     Music  |  Cinema  |  Dance  |  Drama  | TV  |  Radio  | Variety  |  Mimicrys  | Kavidhai  |  Partners  |  Upcoming Events  |  Logos  |  Contact us  |
116. பிரிவாற்றாமை -  திருக்குறள்  
1. செல்லாமை உண்டேல் எனக்குஉரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க்கு உரை.
2. இன்கண் உடைத்தவர் பார்வல்: பிரிவுஅஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு.
3. அரிதரோ தேற்றம் அறிவுஉடையார் கண்ணும்
பிரிவுஓர் இடத்துண்மை யான்.
4. அளித்துஅஞ்சல் என்றுஅவர் நீப்பின் தௌதத்தசொல்
தேறியார்க்கு உண்டோ தவறு.
5. ஓம்பின் அமைந்தார் பிரிவுஓம்பல்: மற்றவர்
நீங்கின் அரிதால் புணர்வு.
6. பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதுஅவர்
நல்குவர் என்னும் நசை.
7. துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறைஇறவா நின்ற வளை.
8. இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல்: அதனினும்
இன்னாது இனியார்ப் பிரிவு.
9. தொடின்சுடின் அல்லது காமநோய் போல
விடின்சுடல் ஆற்றுமோ தீ.
10. அரிதுஆற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவுஆற்றிப்
பின்இருந்து வாழ்வார் பலர்.
  திருக்குறள் - தொகுப்பு