|
12.
நடுவுநிலைமை
- திருக்குறள்
|
|
| 1. |
தகுதி எனஒன்று
நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின். |
 |
|
2. |
செப்பம் உடையவன்
ஆக்கம் சிதைவுஇன்றி
எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து. |
 |
|
3. |
நன்றே தரினும்
நடுவுஇகந்துஆம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல். |
 |
|
4. |
தக்கார் தகவிலர்
என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும். |
 |
|
5. |
கேடும்
பெருக்கமும் இல்லல்ல: நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க்கு அணி. |
 |
|
6. |
கெடுவல்யான்
என்பது அறிகதன் நெஞ்சம்
நடுஒரீஇ அல்ல செயின். |
 |
|
7. |
கெடுவாக வையாது
உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு. |
 |
|
8. |
சமன்செய்து
சீர்தூக்கும் கோல்போல் அமைந்துஒருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி. |
 |
|
9. |
சொற்கோட்டம்
இல்லது செப்பம் ஒருதலையா
உள்கோட்டம் இன்மை பெறின். |
 |
|
10. |
வாணிகம்
செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின். |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |