HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
Quick Links     News & Events  | Music Review  |  Photo gallery  |  Videos |  Audios | Top 10 Songs  |   New Releases | Lyrics  |  Fun in Music | Tamil Books | Specials |
PROFILES     Music  |  Cinema  |  Dance  |  Drama  | TV  |  Radio  | Variety  |  Mimicrys  | Kavidhai  |  Partners  |  Upcoming Events  |  Logos  |  Contact us  |
122. கனவுநிலை யுரைத்தல் -  திருக்குறள்  
1. காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து ?
2. கயல்உண்கண் யான்இரப்பத் துஞ்சின் கலந்தார்க்கு
உயல்உண்மை சாற்றுவேன் மன்.
3. நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டுஎன் உயிர்.
4. கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு.
5. நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவும்தான்
கண்ட பொழுதே இனிது.
6. நனவுஎன ஒன்றில்லை ஆயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன்.
7. நனவினால் நல்காக் கொடியார் கனவினால்
என்எம்மைப் பீழிப் பது?
8. துஞ்சும்கால் தோள்மேலர் ஆகி விழிக்கும்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.
9. நனவினால் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காணா தவர்.
10. நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்ஊ ரவர்?
  திருக்குறள் - தொகுப்பு