HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
Quick Links     News & Events  | Music Review  |  Photo gallery  |  Videos |  Audios | Top 10 Songs  |   New Releases | Lyrics  |  Fun in Music | Tamil Books | Specials |
PROFILES     Music  |  Cinema  |  Dance  |  Drama  | TV  |  Radio  | Variety  |  Mimicrys  | Kavidhai  |  Partners  |  Upcoming Events  |  Logos  |  Contact us  |
127. அவர்வயின் விதும்பல் -  திருக்குறள்  
1. வாள்அற்றுப் புற்கென்ற கண்ணும்: அவர்சென்ற
நாள்ஒற்றித் தேய்ந்த விரல்.
2. இலங்கிழாய் ! இன்று மறப்பின் என் தோள்மேல்
கலம்கழியும் காரிகை நீத்து.
3. உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன்.
4. கூடிய காமம் பிரிந்தார் வரவுஉள்ளிக்
கோடுகொடு ஏறும்என் நெஞ்சு.
5. காண்கமன் கொண்கனைக் கண்ணார; கண்டபின்
நீங்கும்என் மென்தோள் பசப்பு.
6. வருகமன் கொண்கன் ஒருநாள்: பருகுவன்
பைதல்நோய் எல்லாம் கெட.
7. புலப்பேன்கொல்: புல்லுவேன் கொல்லோ: கலப்பேன்கொல்
கண்அன்ன கேளிர் வரின்?
8. வினைகலந்து வென்றீக வேந்தன்: மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து.
9. ஒருநாள் எழுநாள்போல் செல்லும், சேண்சென்றார்
வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.
10. பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறின்என்னாம்
உள்ளம் உடைந்துஉக்கக் கால்?
  திருக்குறள் - தொகுப்பு