|
13.
அடக்கமுடைமை
- திருக்குறள்
|
|
| 1. |
அடக்கம் அமரருள்
உய்க்கும்: அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும். |
 |
|
2. |
காக்க பொருளா
அடக்கத்தை: ஆக்கம்
அதனின்ஊஉங்கு இல்லை உயிர்க்கு. |
 |
|
3. |
செறிவுஅறிந்து
சீர்மை பயக்கும் அறிவுஅறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின். |
 |
|
4. |
நிலையில்
திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது. |
 |
|
5. |
எல்லார்க்கும்
நன்றுஆம் பணிதல்: அவருள்ளும்
செல்வர்க்கே செல்வந் தகைத்து. |
 |
|
6. |
ஒருமையுள்
ஆமைபோல் ஐந்துஅடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து. |
 |
|
7. |
யாகாவார்
ஆயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. |
 |
|
8. |
ஒன்றானும்
தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றுஆகா தாகி விடும். |
 |
|
9. |
தீயினால்
சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு. |
 |
|
10. |
கதம்காத்துக்
கற்றுஅடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து. |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |