|
15.
பிறனில் விழையாமை - திருக்குறள்
|
|
| 1. |
பிறன்பொருளாள்
பெட்டுஒழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல். |
 |
|
2. |
அறன்கடை
நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல். |
 |
|
3. |
விளிந்தாரின்
வேறுஅல்லர் மன்ற தௌதந்தாரில்
தீமை புரிந்துஒழுகு வார். |
 |
|
4. |
எனைத்துணையர்
ஆயினும் என்ஆம்? தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல். |
 |
|
5. |
எளிதுஎன
இல்லிறப்பான் எய்தும்எஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி. |
 |
|
6. |
பகைபாவம் அச்சம்
பழியென நான்கும்
இகவாவாம் இல்இறப்பான் கண். |
 |
|
7. |
அறனியலான்
இல்வாழ்வான் என்பான் பிறனியலான்
பெண்மை நயவா தவன். |
 |
|
8. |
பிறன்மனை
நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு. |
 |
|
9. |
நலக்குஉரியார்
யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறற்குஉரியாள் தோள்தோயா தார். |
 |
|
10. |
அறன்வரையான்
அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று. |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |