|
16.
பொறையுடைமை - திருக்குறள்
|
|
| 1. |
அகழ்வாரைத்
தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை. |
 |
|
2. |
பொறுத்தல்
இறப்பினை என்றும்: அதனை
மறத்தல் அதனினும் நன்று. |
 |
|
3. |
இன்மையுள் இன்மை
விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை. |
 |
|
4. |
நிறையுடமை
நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி ஒழுகப் படும். |
 |
|
5. |
ஒறுத்தாரை
ஒன்றாக வையாரே: வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து. |
 |
|
6. |
ஒறுத்தார்க்கு
ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றும் துணையும் புகழ். |
 |
|
7. |
திறன்அல்ல
தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறன்அல்ல செய்யாமை நன்று. |
 |
|
8. |
மிகுதியான்
மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல். |
 |
|
9. |
துறந்தாரின்
தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர். |
 |
|
10. |
உண்ணாது
நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின். |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |